ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையேயான எலிமினேட்டர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது.
அந்த வகையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியுடன் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 182 ரன்களை குவிக்க பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 101 ரன்களை மட்டுமே குவித்ததால் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் 20 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 33 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதனைத்தொடர்ந்து மும்பை அணியின் ரன் குவிப்பின் வேகமும் குறைந்தது. அதேபோன்று இந்த போட்டியின் போது 16.3 ஆவது ஓவரில் டிம் டேவிட்டும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா களத்திற்கு வந்தார். வழக்கமாக முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளரை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வரும் வேளையில் நேற்றைய போட்டியில் டிம் டேவிட் ஆட்டம் இழந்ததும் சூரியகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக நேஹல் வதேரா இம்பேக்ட் பிளேயராக களத்திற்கு வந்தார்.
இதற்கு காரணம் யாதெனில் : சென்னை மைதானத்தில் 180 ரன்கள் வரை அடித்தால் தான் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருக்கும் என்பதனால் 21 பந்துகள் எஞ்சியிருந்த வேலையில் அந்த நேரத்தில் கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே வதேரா அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே-வை ஜெயிப்போம் என வாய் பேசிய கில்லை திணற திணற தடுமாற வைத்து தட்டி தூக்கிய சி.எஸ்.கே – இதெல்லாம் நமக்கு தேவையா என கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
அந்த வகையில் களமிறங்கிய வதேராவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 23 ரன்கள் குவித்து அணியின் ரன் குவிப்பையும் அதிகப்படுத்தினார். அதன் காரணமாகவே சூர்யகுமார் யாதவ் வெளியேற்றப்பட்டு நேஹல் வதேரா களத்திற்குள் கொண்டுவரப்பட்டார். ரோகித் எடுத்த இந்த முடிவு மிகச் சிறப்பாக அமைந்தது.