- Advertisement 3-
Homeவிளையாட்டுதோனியின் 16 வருஷ ரெக்கார்ட்.. முற்றுப்புள்ளி வைத்து முத்திரை பதித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்..

தோனியின் 16 வருஷ ரெக்கார்ட்.. முற்றுப்புள்ளி வைத்து முத்திரை பதித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்..

- Advertisement-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்த இரண்டாவது டி 20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றிருந்தது. டக்வொர்த் லீவிஸ் படி, 15 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி, ஏழு பந்துகள் மீதம் வைத்து அதிரடியாக அடி இலக்கை எட்டிப்பிடித்திருந்தது. டி20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் இருப்பதால் இந்திய அணி நிச்சயம் அந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.

இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் அடித்து நொறுக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருந்தனர்.

- Advertisements -

ஆரம்பமே இந்திய அணிக்கு தடங்கலாக இருந்ததால் எந்த அளவுக்கு அவர்கள் ரன் குவிப்பார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், எந்தவித பயமும் இன்றி துணிச்சலுடன் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை பறக்க விட்டார். அவருக்கு உற்ற துணையாக ரிங்கு சிங்கும் அதிரடி காட்ட, இந்திய அணி சிறந்த ஸ்கோரை எட்டவும் அவர்கள் உதவி செய்தனர்.

இந்திய அணி 19.3 ஓவர்களில் பேட்டிங் செய்திருந்த போது மழை குறுக்கிட, முதல் இன்னிங்சும் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 68 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 180 ரன்கள் என்ற சிறந்த ஸ்கோரை எட்டி இருந்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

இதனிடையே, கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் பேட்டிங் செய்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி அனைத்தையும் தன் வசமாக்கி உள்ளார். குறைந்த டி 20 போட்டிகளில் 2,000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் (56 இன்னிங்ஸ்) பகிர்ந்து கொண்டுள்ளார் சூர்யகுமார் யாதவ். இன்னொரு பக்கம், குறைந்த பந்துகளில் (1164) 2,000 ரன்களை டி 20 போட்டியில் தொட்ட வீரர் என்ற சாதனையும் அவர் பக்கமாகி உள்ளது.

முன்னதாக, தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு இந்திய கேப்டன் டி 20 போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக, கடந்த 2007 ஆம் ஆண்டு, தோனி அடித்த 45 ரன்கள் தான் இருந்தது. ஆனால், அதனை கடந்த சூர்யகுமார், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களின் மண்ணில் அரை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையயை படைத்ததுடன் தோனியின் 16 ஆண்டுகால சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யகுமார்.

சற்று முன்