- Advertisement 3-
Homeவிளையாட்டுமேட்சை மாற்றிய சூர்யகுமார் கேட்ச்.. இந்தியா ஜெயிச்சபின் வெடித்த புது பூகம்பம்.. உண்மையில் நடந்தது என்ன?..

மேட்சை மாற்றிய சூர்யகுமார் கேட்ச்.. இந்தியா ஜெயிச்சபின் வெடித்த புது பூகம்பம்.. உண்மையில் நடந்தது என்ன?..

- Advertisement 1-

இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விராட் கோலி உதவியுடன் 176 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாபிரிக்க அணியில் அதிரடி பேட்டிங் லைன் அப் இருப்பதால் இந்த ஸ்கோர் போதுமானதாக தெரியவில்லை என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இது பேட்டிங் பிட்ச் ஆகவும் இருப்பதால் இந்திய அணியின் பந்து வீச்சில் பெரிய மாயாஜாலம் நடந்தால் தான் அவர்களால் வெற்றி பெற முடியும் என்ற நிலையும் இருந்தது. அப்படி ஒரு சூழலில் ஆரம்பத்தில் ஒரு சில விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் எடுத்திருந்தாலும் டி காக், ஹென்ரிச் கிளாசன் உள்ளிட்ட பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதிலும் 23 பந்துகளில் அரைச்சதம் அடித்து பட்டையை கிளப்பி கொண்டிருந்த கிளாசன் களத்தில் இருந்தபோது அவர்களின் வெற்றிக்கு ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது. கிளாசன், மில்லர் இருந்ததால் கைவசம் 6 விக்கெட்டுகளும் இருக்க, தென்னாப்பிரிக்க அணியின் கைதான் அதிகம் ஓங்கி இருந்தது.

ஆனால் இதன் பின்னர் பந்த பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர், மிக நேர்த்தியான இடத்தில் பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதனால் அடுத்த நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்த தென்னாபிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரின் முதல் பந்தில் மில்லரின் கேட்சை மிக அபாரமாக எடுத்து அசத்தி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.

- Advertisement 2-

சிக்ஸர் என்று அனைவரும் எதிர்பார்த்த போது தாவி பிடித்ததுடன் மட்டுமில்லாமல் தனது வேகத்தை மிகச்சரியாக கட்டுப்படுத்தி சிக்ஸர் போகாமல் கேட்ச்சாகவும் மாற்றி இருந்தார். இதன் பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக ஆடாமல் போக இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது டி20 உலக கோப்பைக்கு சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.

இதனிடையே இந்த போட்டியின் திருப்பமுனையாக இருந்த சூர்யகுமாரின் அபாரமான கேட்ச் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரிக்கெட் வரலாறு கண்ட மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்றாக பார்க்கப்படும் இதில் சூர்யகுமாரின் கால் சிறிதாக பவுண்டரி லைனை தொட்டதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக அந்த வீடியோவை மிகவும் ஜூம் செய்து பவுண்டரி லைனில் இருக்கும் ஒரு சிறிய அசைவையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், அந்த பந்தில் பவுண்டரி லைனுக்கு முன்பாகவே அதன் தடம் சரியாக தெரிய சிக்சர் லைன் எப்போது மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் பெரிதாக எழுந்துள்ளது. ஆனால் அதே வேளையில், இதில் உண்மை எதுவுமில்லை என்றும், புல்லில் உருவான அசைவை தான் பவுண்டரி லைன் என தென்னாபிரிக்க ரசிகர்கள் தேவை இல்லாமல் சர்ச்சையை கிளப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பவுண்டரி லைனில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் ஆதாரங்களுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்