கோலி, ரோகித் எல்லாம் இல்ல.. இந்திய அணியில நான் இவரோட ரசிகன் தான்… சின்னதா சில மாற்றங்கள் செஞ்சாலே போதும் அவர் ஜொலிப்பாரு.. ஏபி.டி பேச்சு

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி களமிறங்குவதால், கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்திய அணியில் சில பிரச்சனைகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்திய அணியில் பேக் அப் வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் தேர்வுக்கு பல்வேறு தரப்பினும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இதுவரை பெரிதாகா சாதிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கடந்த ஓராண்டாக ஒருநாள் கிரிக்கெட் சூர்யகுமார் யாதவ் எதையும் செய்யவில்லை.

- Advertisement -

இருப்பினும் சஞ்சு சாம்சன், சாஹல், அஸ்வின் உள்ளிட்டோரை புறக்கணித்துவிட்டு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசும் போது, உலகக்கோப்பை அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிம்மதியாக இருக்கிறது. ஏனென்றால் சூர்யகுமார் யாதவின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். நான் எப்படி டி20 கிரிக்கெட்டில் விளையாடினேனோ, அதேபோல் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டின் சூட்சமத்தை புரிந்துகொள்ளவில்லை. மனநிலையில் சில மாற்றங்களை செய்தால், அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும். அதற்கான திறமை சூர்யகுமார் யாதவிடம் இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் அதனை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சஞ்சு சாம்சன் பற்றி பேசும் போது, ஆர்சிபி அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 92 ரன்கள் விளாசிய போது, நான் அவரின் ஆட்டத்தை நேரடியாக பார்த்தேன். பந்து மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறந்து சென்றது. அவரிடம் அனைத்து ஷாட்களும் இருக்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாட மனநிலையில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்