- Advertisement -
Homeவிளையாட்டு6, 6, 6, 6 ... அடுத்தடுத்த 4 சிக்ஸர்கள்... கேமரூன் க்ரீனை அலறவிட்ட சூரியகுமார்...

6, 6, 6, 6 … அடுத்தடுத்த 4 சிக்ஸர்கள்… கேமரூன் க்ரீனை அலறவிட்ட சூரியகுமார் யாதவ்

- Advertisement-

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 104 ரங்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரங்களும் எடுத்துள்ளனர். இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 200 ரன்கள் குவித்தன.

தொடர்ந்து இருவரும் அடுத்து அடுத்து ஆட்டம் இழக்க பிறகு களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பாடுத்தினார். 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 52 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து இஷான் கிஷான் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 31 ரன்களுடன் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சிரமான சூரியகுமார் யாதவ் களமிறங்கினார்.

கிரீஸிற்கு வந்த உடனே சிக்ஸர்கள் பறக்கும் என எதிர்பார்த்த நிலையில் முதல் இரண்டு ஓவர்கள் நிதாரணமாக விளையாடினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 44ஆவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை லெக் சைடு சிக்ஸ் அடித்து பறக்க விட்டார். பின்னர் இரண்டாவது பந்தை பின் திசையில் தூக்கி அடித்தார். தொடர்ந்து மூன்றாவது பந்தை ஆப் சைடும் நான்காவது பந்தை மீண்டும் லெக் சைடு அடித்தார். தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

- Advertisement-

சூரியகுமார் யாதவ் அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் ரசிகர்கள் கொடுத்த சத்தம் ஸ்டேடியத்தை அலற விட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சூரியகுமார் யாதவ் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து தனது இரண்டாவது அரைசதத்தை உறுதி செய்தார்.

ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அடித்துள்ளது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

சற்று முன்