- Advertisement -
Homeவிளையாட்டுஎனக்கு SKY-னு பேரு வச்சது யார் தெரியுமா? இந்த இந்திய கிரிக்கெட் வீரர் தான்....

எனக்கு SKY-னு பேரு வச்சது யார் தெரியுமா? இந்த இந்திய கிரிக்கெட் வீரர் தான். அந்த ஷாட்டுக்கான அர்த்தம் அங்க இருந்து வந்தது தான் – சூர்யகுமார் பகிர்ந்த சூப்பர் தகவல்

- Advertisement-

இந்திய டி 20 கிரிக்கெட் அணியில் இப்போது நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் சூர்யகுமார். அவர் வந்தாலே ரசிகர்கள் குஷியாகி சிக்ஸரும் பவுண்டரிகளுமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையில் கோலியோடு இணைந்து அவர் சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரால் அதே ஃபார்மை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் காட்ட முடியவில்லை. சமீபத்தில் அவருக்கு இந்த இரண்டு வடிவிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இரண்டிலுமே சொதப்பினார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

இந்நிலையில் இப்போது ஐபிஎல் முடிந்துள்ள நிலையில் பிசிசிஐ சூர்யகுமார் யாதவ்விடம் சில சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை பெற்று வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் தன்னை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்.

முதல் கேள்வியாக உங்களுக்கு யார் SKY என்று பெயர் வைத்தது என்ற கேள்விக்கு சூர்யா, “நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் போது, 2014/2015 என்று நினைக்கிறேன், கேகேஆர் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர்தான் என்னை முதலில் அப்படி அழைத்தார். அதன் பிறகு எல்லோருமே என்னை அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement-

அடுத்த கேள்வியாக சுப்ளா ஷாட் என்றால் என்ன என்ற கேள்விக்கு “இந்த வார்த்தை டென்னிஸ் கிரிக்கெட்டில் இருந்து வந்தது. சுப்ளா ஷாட் என்றால் தன்னை நோக்கி வரும் பந்தை கீப்பருக்கு மேலே தூக்கி அடிப்பது என்று அர்த்தம்” என விளக்கியுள்ளார்.

மேலும் அணியில் தனக்குப் பிடித்த வீரர்கள் யார் என்ற கேள்விக்கு எந்த தயக்கமும் இல்லாமல் “இஷான் கிஷான், முகமது சிராஜ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரோடு நேரம் செலவிட விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் தமிழக வீரர் அஸ்வினோடு இருப்பதையும் நான் விரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அந்த வீடியோவில் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.

சற்று முன்