வீடியோ: தன் பேட்டாலேயே அவுட் ஆன சூர்யா. வேடிக்கையான ஒரு விக்கெட்!

- Advertisement -

நேற்றையை ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. இரு அணிகளும் ப்ளே ஆஃப் செல்ல, இந்த போட்டியை வெல்வது முக்கியம் என்ற சூழலில் பரபரப்பாக நடந்து முடிந்தது இந்த போட்டி.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியின் நடுவரிசை வீரர் மார்கஸ் ஸ்டாய்னஸ் ஒரு புறத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து அணியை கௌரவமான ஸ்கோருக்கு அழைத்து சென்றார். 47 பந்துகளை சந்தித்த அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 87 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அவரது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடக்கம். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் சேர்த்தது. சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் அதிக சுழல்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையடுத்து 178 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஜோடியான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.  இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்த பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற ஆரம்பித்தது.

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த போட்டியில் சதம் அடித்த அணியின் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். வழக்கமாக அவர் ஆடும் ஸ்கூப் ஷாட் ஆடிய போது பந்து அவர் பேட்டில் பட்டு ஸ்டம்பில் விழுந்தது. எத்தனையோ முறை அவருக்கு சிக்ஸர்களைக் கொடுத்த ஸ்கூப் ஷாட் இந்த முறை பரிதாபகரமாக அவரின் விக்கெட்டையே பறித்தது.

இதன் பின்னர் லக்னோ அணியின் கை ஓங்க, கடைசி 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டிம் டேவிட் மற்றும் கேமரான் க்ரீன் என இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் மோசின் கான் அபாரமாக பந்துவீசி, 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை வென்றெடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்