- Advertisement 3-
Homeவிளையாட்டுசஞ்சு சாம்சன் ஜெர்சியை போட்டுக்கொண்டு ஆடிய சூரியகுமார்... இதுதான் காரணமா?.. வெளியான தகவல்

சஞ்சு சாம்சன் ஜெர்சியை போட்டுக்கொண்டு ஆடிய சூரியகுமார்… இதுதான் காரணமா?.. வெளியான தகவல்

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சில் சிக்கி மொத்தமாக 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் – இஷான் கிஷன் தொடக்கம் கொடுத்தனர். இளம் வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களின் பேட்டிங் வரிசையை இளம் வீரர்களுக்கு அளித்தனர். இதில் கில் 7 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் 52 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசியாக ரோகித் சர்மா – ஜடேஜா கூட்டணி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த்ள்ளது. இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் செய்த சேட்டையால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சன் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement 2-

ஆனால் திடீரென சஞ்சு சாம்சன் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் குழம்பினர். சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருக்கிறாரோ என்று குழப்பத்தோடு ரசிகர்கள் டிவியை பார்த்த போது, சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை மாற்றி அணிந்து களமிறங்கியது தெரிய வந்தது. வழக்கமாக 63 எண் கொண்ட ஜெர்சியில் தான் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் 9 எண் கொண்ட ஜெர்சியுடன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இதற்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு லாஜிஸ்டிக் பிரச்சனையாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது.

சூரியகுமார் யாதவ் இது போன்று ஜெர்சியை மாற்றி அணிந்துகொண்டு களத்திற்கு வருவது இது முதல் முறை அல்ல. கடந்த வருடம் இதே போல இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டியின் போது கூட அவர் அர்ஷிதீப் சிங் ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்