- Advertisement -
Homeவிளையாட்டுநான் ஃபர்ஸ்ட் பேட்டிங் என நினைச்சு விளையாடவே இல்லை. சதம் அடித்ததின் சீக்ரெட்டை சொன்ன சூர்யா!

நான் ஃபர்ஸ்ட் பேட்டிங் என நினைச்சு விளையாடவே இல்லை. சதம் அடித்ததின் சீக்ரெட்டை சொன்ன சூர்யா!

- Advertisement-

நேற்றைய ஐபிஎல் போட்டி ஒரு சினிமாவின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸுக்கு நிகராக சென்று பரபரப்புடன் முடிந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 191 ரன்கள் மட்டுமே அடித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மும்பை பேட்டிங்கின் போது மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அவர் சந்தித்த 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசி மைதானத்தை ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வோடு வைத்திருந்தார். நேற்றைய போட்டியில் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார்.

முதல் 34 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் அடுத்த 15 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவரின் இந்த இன்னிங்ஸ் அவரின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என முன்னாள் வீரர்களால் புகழப்பட்டு வருகிறது. இந்த இன்னிங்ஸ் பற்றி பேசிய சூர்யகுமார் தான் இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கை துரத்துவதாக நினைத்துதான் பேட் செய்ததாக கூறியுள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “என்னுடைய சிறந்த T20 இன்னிங்ஸ்களில் ஒன்று என்று சொல்லலாம். நான் ரன்களை எடுக்கும் போதெல்லாம், அணி வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மிக முக்கியமாக இன்று நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், ஆனால் 200-220 துரத்தும்போது எந்த வேகத்தில் விளையாடுவோமோ அதே டெம்போவில் விளையாடினோம்.

- Advertisement-

மைதானத்தில் நிறைய பனி இருந்தது, அது 7-8வது ஓவரில் இருந்தே இருந்தது, என்ன ஷாட்களை விளையாடுவது என்று எனக்குத் தெரியும், நேராக அடிப்பதைப் பற்றி நான் யோசிக்கவில்லை, என் மனதில் இரண்டு ஷாட்கள் இருந்தன – ஒன்று ஃபைன் லெக் மற்றும் தேர்ட் மேன் திசையில் விளையாடுவது. ஆட்டத்துக்கு முன் நிறைய பயிற்சிகள் உள்ளன, எனவே பேட் செய்ய  வரும்போது நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன், மேலும் என்னை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.” என பேசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 5 போட்டிகளில் நான்கை வென்று இப்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சற்று முன்