ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இப்படி தொடர்ச்சியான தொடர்களுக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் தற்போது ஓய்வில் ஒரு மாத காலம் உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்பத்தோடு வெளிநாடுகளில் தங்கள் பொழுதுகளை அழித்து வருகின்றனர். இதில் சூரியகுமார் யாதவும் விதிவிலக்கல்ல. அவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.
இபிசா தீவுகளுக்கு தனது மனைவியோடு சென்றுள்ள அவர், மூன்று நாட்கள் அங்கு தங்கி உள்ளது தெரியவந்தது .அந்த மூன்று நாட்களும் அவர் தன் மனைவியோடு எல்லாவெல்லாம் செய்தார், அவரின் உணவுகள் என்ன, இப்படி பல்வேறு தகவலாக்களை தொகுத்து அவருடைய மனைவி ஒரு வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சூரியகுமார் யாதவன் மனைவியான தேவிஷா செட்டி வெளியிட்டுள்ள இந்த குறும்படமானது சூரியகுமார் யாதவ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு அவர் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வரலாம் இருந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள அந்த குறும்பதின் மூலம் சூரியகுமார் யாதவ் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற விவரம் அவரது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அந்த குறும்படத்தின் டைட்டிலாக முப்பது செகண்டில் மூன்று நாட்கள் என்று அவருடைய மனைவி வைத்துள்ளார். அந்த விடீயோவை கண்ட ரசிகரின் ஒருவர், நீங்க எடிட்டரா மாறிட்டீங்களா என கேள்வி எழுப்பி உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இந்திய அணி பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இல்லை என்றாலும் அவர் அதில் ஸ்டான்ட்பை வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐபிஎல் இல் மும்பை அணிக்காக அவருடைய அபார ஆட்டத்தை நாம் கண்டோம். இந்த முறை ஐபிஎல் இல் அவர் 600 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அந்த அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது, இது குறித்த பிலேயிங் லெவன் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் மிக விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: அஸ்வின் செய்த இந்த ஒரு சின்ன விஷயம் TNPL-ல உலக அளவுல உற்று நோக்க வச்சிடுச்சி. ஆனா இதெல்லாம் ரூல்ஸ்லயே இல்ல தெரியுமா – ஆகாஷ் சோப்ரா பேச்சு.
இதில் மூன்று விதமான போட்டியின் ஸ்குவாடிலும் சூரிய குமாரின் பெயர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டியானது ஜூலை 12ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை இருக்கும். அதே போல் ஒரு நாள் போட்டியானது 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1 வரை நீடிக்கும் மற்றும் டி20 போட்டியானது ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.