ஜெய்ஸ்வால் சதமடிக்கக் கூடாது என வைட் போட்ட பவுலர்… புரிஞ்சுகிட்டு சஞ்சு சாம்சன் செய்த செயல் – நீங்க தோனி 2.0 சஞ்சு என புகழும் ரசிகர்கள்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகின்றன. அனைத்து அணிகளும் 10க்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடியுள்ள நிலையில் இந்த ஆண்டு இன்னமும் 9 அணிகளுக்கு ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில்தான் நேற்று ஒரு பரபரப்பான போட்டி நடந்து முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மோதிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை 14 ஓவர்களில் வென்று ரன் ரேட்டை ஏற்றிக்கொண்டது. போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ராஜஸ்தானுக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 151 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இறங்கிய ராஜஸ்தான் அணியின் 21 வயது இளம் தொடக்க ஆட்டக்காரரான 13 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

- Advertisement -

அரைசதத்துக்குப் பின்னர் வேகத்தை குறைத்த அவர் இன்னிங்ஸ் முடியும் போது 47 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். இந்நிலையில் 13 ஆவது ஒவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட போது கொல்கத்தா அணி பவுலர் சுயாஷ் சர்மா ஜெய்ஸ்வால் சதமடிப்பதை தடுப்பதற்காக வைட் பந்தை வீசினார். அதை புரிந்துகொண்ட பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வைட் பந்தை தடுத்து நிறுத்தி டாட் பந்தாக்கினார். சஞ்சு சாம்சனின் இந்த செயல் ஐபிஎல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதே போன்று ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முப்பு இந்திய அணியிலும் அரங்கேறியது. இந்திய அணி 173 ரன்களை சேஸ் செய்ய, கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது 19 ஓவரின் கடைசி பந்தை தோனி சந்திக்க, அவர் அதை அடித்திருக்க முடியும் என்றாலும் அடிக்காமல் விட்டு, கோலி 20வது ஓவரில் ஆட்டத்தை முடிக்க வழிவகை செய்தார். அந்த போட்டியில் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது சம்மந்தமான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகிவருகின்றன. இதன் காரணமாக தற்போது ரசிகர்கள் பலரும் சஞ்சுவையும், தோனியையும் ஒப்பிட்டு, இருவருமே சக வீரர்களின் நலனுக்காக தியாகம் செய்கின்றனர் என்ற வகையில் மீம்களை ஷார் செய்கின்றனர். அதே போல சுயாஷ் சர்மாவுக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக சேவாக் சதமடிப்பதை தடுக்க, இலங்கை அணி பவுலர் சுராஜ் ரன்தீவ் நோ பால் வீசி

இந்த போட்டியை பொறுத்தவரை, அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை அடைந்தார். ஆனால் 94 ரன்களில் இருந்த அவர் சிக்ஸ் அடித்திருந்தால் மட்டுமே சதமடித்திருக்க முடியும் என்ப்தால் 98 ரன்களோடு அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

சற்று முன்