உத்தரபிரதேச டி20 போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ரிங்கு சிங் உள்ளிட்ட சில வீரர்கள் கலந்துகொண்டு அந்த போட்டியின் தரத்தை உயர்த்துவதோடு மட்டும் அல்லாமல், கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அந்த போட்டியை உற்று நோகும்படி செய்துள்ளனர். அந்த வகையில் இன்று மீரட் மேவரிக்ஸ் அணிக்கும் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதனால் மீரட் மேவரிக்ஸ் அணி பேட்டிங் செய்ய துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சோயிப் சித்திக் மற்றும் ஸ்வஸ்திக் சிகாரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சோயிப் சித்திக் 22 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
மறுபுறம் ஸ்வஸ்திக் சிகாரா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சோயிப் சித்திக் அவுட் ஆனதும் களத்திற்கு வந்த மாதவ் கௌசிக் 12 ரன்களில் வெளியேற, அடுத்ததாக அந்த அணியின் கேப்டன் ரிங்கு சிங் களத்திற்கு வந்து எப்போதும் போல தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். அணியின் ஸ்கோர் மளமளவென உயர துவங்கின.
ரிங்கு சிங் ஒருபுறம் என்றால் ஸ்வஸ்திக் சிகாரா மறுபுறம் என மாறி மாறி பவுலர்களை திணறடித்தனர். ஒரு கட்டத்தில் ரிங்கு சிங்க் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஸ்வஸ்திக் சிகாரா மட்டும் தொடர்ந்து களத்தில் ஆடி வந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மீரட் மேவரிக்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்தது.
204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களத்திற்கு வந்த கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு ஆரம்பமே பெரும் சறுகளாக அமைந்தது. அன்ஷ் யாதவ் மற்றும் ராகுல் ராஜ்பால் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்க, அதில் ராகுல் ராஜ்பால் பூஜ்யம் ரன்களில் வெளியேறினார். இதனால் அடுத்து களத்திற்கு வந்தார் சமீர் ரிஸ்வி.
அன்ஷ் யாதவ் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் கூட்டணியில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர துவங்கியது. அன்ஷ் யாதவ் 48 ரன்களில் வெளியேற, மறுபுறம் சமீர் ரிஸ்வி அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். சமீர் ரிஸ்வி 59 அப்பந்துகளில் 122 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 19 ஓவர் முடிவிலேயே கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்து இந்த போட்டியில் வென்றது.
Ballebaazi 🏏 aisi jo dekhna chahoge doobara… 😍
Kamaal kardiye Swastik Chikara! 👏 💯#AbMachegaBawaal #JioUPT20 #UPT20onJioCinema pic.twitter.com/p6wSmOfLbq— JioCinema (@JioCinema) September 1, 2023
இதில் மீரட் மேவரிக்ஸ் அணியின் வீரரான ஸ்வஸ்திக் சிகாராவின் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்வாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருவழியாக 20வது ஓவரில் அவர் சதத்தை எட்டினார். அவர் சதம் அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள் 57. இதில் மொத்தம் 13 பவுடரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடக்கம். அவர் அடித்த பவுண்டரி மற்றும் சக்ஸரை மட்டும் கணக்கிட்டால் 16 பந்துகளில் 70 ரன்களை குவித்துள்ளார்.