சி.எஸ்.கே ஜெயிக்க வேண்டும் என மஞ்சள் நிற பொருட்களை வாங்கும் சிறுமி. ஸ்விகி கொடுத்த அசத்தல் கிப்ட் – விவரம் ஈதோ

- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் வரவேற்பு வேறு எந்த விளையாட்டிற்கும் கிடையாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் வரவேற்பினை பெற்று தற்போது 16-வது ஐபிஎல் தொடரானது திருவிழா போன்று நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றே கூறலாம். அந்தவகையில் அந்த வார்த்தைகளை நிரூபிக்கும் விதமாக ஒரு சிறிய பெண் ரசிகை சிறுமி ஒருவர் ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக மஞ்சள் நிற பொருட்களையே வாங்கி குவிக்கிறார்.

- Advertisement -

அதோடு மஞ்சள் நிற டிரஸ்ஸை அணிந்து சிஎஸ்கே போட்டிகளை கண்டு களிக்கிறார் என்றும் அவரது உறவினர் ஒருவர் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிந்துள்ளார். மேலும் அவ்வாறு மஞ்சள் நிற பொருட்களை அந்த சிறுமி வாங்கினால் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது என்றும் அந்த சிறுமி நம்புவதாக அவரது அத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பாவனா என்கிற அந்த நபர் வெளியிட்டுள்ள இந்த பதிவில் : ஒவ்வொரு சென்னை போட்டிக்கு முன்பாகவும் இவள் மஞ்சள் நிறத்திலேயே அனைத்து பொருட்களையும் வாங்குகிறாள். அப்படி வாங்கினால் தான் சென்னை அணி வெற்றி பெறும் என்று அவள் நம்புவதாக அவர் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த புகைப்படத்தை கண்ட பிரபல உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனமானது அவருக்கு அன்பளிப்பு வழங்கும் விதமாக மஞ்சள் நிறத்தில் தங்களிடம் கிடைக்கும் சில பொருட்களை அவருக்கு பரிசாக வழங்கி அந்த சிறுமியை வாழ்த்தி உள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்