- Advertisement 3-
Homeவிளையாட்டுவெளியான டி 20 உலக கோப்பை அட்டவணை.. அந்த ஒரு விஷயத்தை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்த...

வெளியான டி 20 உலக கோப்பை அட்டவணை.. அந்த ஒரு விஷயத்தை பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய ரசிகர்கள்..

- Advertisement 1-

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து சூப்பராக வந்த வாய்ப்பையும் தவற விட்டிருந்தது. ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, இறுதி போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது ரசிகர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருந்தது.

இதற்கடுத்து நடந்து வரும் தொடர்களை இந்திய அணி வென்று வந்தாலும் ஏனோ உலக கோப்பை தோல்வியை மட்டும் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பதும் ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது.

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறந்து விளங்கி வந்தாலும், டி 20 போட்டிகளில் அதிக ஆதிக்கத்துடன் இருக்க காரணம், ஐபிஎல் தொடரில் சாதிக்கும் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பதால் தான். இதனால், டி 20 உலக கோப்பையை 16 வருடங்கள் கழித்து வெல்லவும் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருப்பதாகவே தெரிகிறது.

இந்த நிலையில், உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 20 அணிகள் க்ரூப் A, B, C, D என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பி க்ரூப்பில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும், சி க்ரூப்பில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பப்பு நியூ குனியா உள்ளிட்ட அணிகளும், டி க்ரூப்பில் தென்னாபிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளது.

- Advertisement 2-

வழக்கம் போல இந்த உலக கோப்பைத் தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (Group A) இடம்பெற்றுள்ளது. மேலும் இவர்களுடன் அயர்லாந்து, கனடா மற்றும் USA அணிகள் இடம்பெற்றுள்ளது. மற்ற குழுக்களுடன் ஒப்பிடும் போது இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற லட்டு போன்ற வாய்ப்பு உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் சிறிய அணியாக இருந்த போதிலும் உலக கோப்பைத் தொடரில் ஆடிய அனுபவம் அவர்களுக்கு அதிகம் உள்ளதால் அவர்கள் இருக்கும் குழுவில் போட்டி அதிகமாக இருக்கும்.

ஆனால், இந்திய அணியின் க்ரூப்பில் கனடா மற்றும் USA அணிகள் இருப்பது அவர்களுக்கு சாதகமாக தான் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், 2022 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரை போல பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை இந்திய அணி தோற்கடிக்க வேண்டும் என்பது தான் கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

சற்று முன்