- Advertisement -
Homeவிளையாட்டுநட்டு ரிட்டர்ன்ஸ்.. உத்தரப் பிரதேச அணியை பொளந்த நடராஜன்.. தரமான வெற்றியை பெற்ற தமிழ்நாடு

நட்டு ரிட்டர்ன்ஸ்.. உத்தரப் பிரதேச அணியை பொளந்த நடராஜன்.. தரமான வெற்றியை பெற்ற தமிழ்நாடு

- Advertisement-

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபில் வலைப்பந்துவீச்சாளராக பயணித்த நடராஜன், மீண்டும் தமிழ்நாடு வரும் போது இந்திய அணியின் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சர்வதேச வீரராக வந்தார். தமிழ்நாட்டில் இருந்து பாலாஜிக்கு பின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப ஐபிஎல் தொடரில் யார்க்கர் பந்துகளை சிறப்பாக வீசி அசத்தினார். டெத் ஓவர்களில் நடராஜனை அட்டாக் செய்ய வேண்டும் என்று ஏராளமான பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் நடராஜனின் வளர்ச்சி இந்தியா கடந்தும் சர்வதேச வீரர்கள் மத்தியில் அதிகமாகியது.

இதனால் 2021ஆம் ஆண்டு டி20 தொடரில் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று பார்க்கப்பட்ட நிலையில், மொத்தமாக அவரது காலில் ஏற்பட்ட காயம் வாழ்க்கையையே மாற்றியது. அதன்பின் ஐபிஎல் தொடர், டிஎன்பிஎல் தொடர்களில் மட்டுமே நடராஜன் விளையாடி வந்தார். தமிழ்நாடு அணிக்காக கூட நடராஜன் களமிறங்க முடியாத அளவிற்கு காயம் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நடராஜன் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக கம்பேக் கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. இதில் முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 147 ரன்கள் என்ற இலக்குடன் வலிமை வாய்ந்த உத்தரப் பிரதேச அணி சேஸிங்கை தொடங்கியது.

- Advertisement-

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 19வது ஓவரை வீச நடராஜன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் துருவ் ஜுரல் மற்றும் நிதிஷ் ராணா இருவரின் விக்கெட்டை கைப்பற்றி தமிழ்நாடு அணியின் வெற்றியை உறுதி செய்தார் நடராஜன். அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய நடராஜன் 4 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் தமிழ்நாடு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடராஜன் கம்பேக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்