- Advertisement -
Homeவிளையாட்டு2007 டி20 உலக கோப்பை ஜெயிச்சதும் நடந்த அதே சம்பவம்.. தோனி மாதிரி கில்லுக்கும் காத்திருந்த...

2007 டி20 உலக கோப்பை ஜெயிச்சதும் நடந்த அதே சம்பவம்.. தோனி மாதிரி கில்லுக்கும் காத்திருந்த சோகம்..

- Advertisement-

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த அணியை ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கி இருந்த இரண்டு முறையும் இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் ஒருமுறை கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்திருந்தார். தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இதனால், குஜராத் அணி இளம் வீரர் சுப்மன் கில்லை புதிய கேப்டனாக அறிவித்திருந்தது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் கில் முதல் தர கிரிக்கெட்டில் கேப்டன்சிப்பில் கலக்கியது போல இந்த முறையும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் குஜராத் அணி முதல் முறையாக தங்களின் மூன்றாவது ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் சுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு தற்போது கிடைத்திருந்தது. டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் சுற்று பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகளில் ஆடுகிறது.

பல முக்கியமான வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறாததால் சுப்மன் கில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் ஐபிஎல் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் ஜொலித்த பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க ஜிம்பாவேவிற்கு கடும் அதிர்ச்சி அளிப்பார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால் உகாண்டா அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக உலக கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறி இருந்த ஜிம்பாப்வே அணி, அதில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருந்தது.

- Advertisement-

முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே எடுக்க பின்னர் ஆடிய இந்திய அணி 102 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. கில் கேப்டன்சி தொடங்கி இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருத்துராஜ், ரியன் பராக், ரிங்கு சிங் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி இன்னும் கவனத்துடன் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர்களை சிறிய அணியாக கருதி எதிர்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று அதன் பின்னர் நடந்த ஒரு சம்பவம் தற்போது மீண்டும் ஒருமுறை நடந்துள்ளது. தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் முதன் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தது இந்தியா.

இதில் அவர்கள் ஆடிய முதல் டி20 போட்டியிலேயே 72 ரன்களில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சி தோல்வியையும் அடைந்திருந்தனர். அதேபோல தற்போதும் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற பின்னர் வெளிநாட்டு மண்ணில் ஆடிய முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்