முதலாவது டி 20 உலக கோப்பை தொடர், கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது. தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி இருந்த இந்திய அணி, பாகிஸ்தானை இறுதி போட்டியில் வீழ்த்தி கோப்பையை சொந்தமாக்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நடந்த டி 20 உலக கோப்பைத் தொடர்களில் ஒரு முறை மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
ஒரு சில முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, பலவீனமான அணியை போல ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டிருந்தது. சமீப காலமாகவே லீக் போட்டிகளில் எல்லாம் சிறப்பாக ஆடி நாக் அவுட் போட்டிகள் என வரும்போது மொத்த அணியும் சொதப்பி ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் கடந்த 11 ஆண்டுகளாக தவற விட்டு வருகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதி, கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டிகள் உள்ளிட்ட பலவற்றை சொல்லலாம். ரோஹித் மற்றும் கோலியால் இன்னும் தொட்டுப் பார்க்க முடியாத இடத்தில் இருக்கும் ஐசிசி கோப்பையை நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் நிறைவேற்றி விடுவார்கள் என்றும் தெரிகிறது.
அந்த வகையில் பேட்டிங், ஆல் ரவுண்டர் வீரர்கள், பந்துவீச்சு உள்ளிட்ட அனைத்து ஏரியாவிலும் சிறப்பான வீரர்களை இந்திய அணி தேர்ந்தெடுத்து உள்ளதால் ரோஹித் சர்மா இந்த முறை கோப்பையை கைப்பற்றாமல் விடமாட்டார். இதனிடையே 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலக கோப்பை தொடருக்கும், தற்போது நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பைக்கும் உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது பார்க்கலாம்.
கடந்த 207ஆம் ஆண்டு அடிய இந்திய உலக கோப்பை அணியில் இர்பான் பதான், அஜித் அகர்கர் என வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் வீரர்கள் இருந்தனர். அதேபோல இந்த முறையும் ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதே போல தோனியின் தலைமையில் ஆடியிருந்த அணியில் யுவராஜ் சிங், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், யூசுப் பதான் என சிறந்த சுழற்பந்து வீச்சு ஆப்ஷன்கள் இருந்தது.
அதேபோல இந்த முறையும் வேகப்பந்து வீச்சை விட திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர். இந்த ஒற்றுமைகளை தாண்டி இன்னொரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது இந்த இரண்டு தொடரிலும் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தது தான்.
கௌதம் கம்பீர், இர்பான் பதான், யுவராஜ் சிங் என அந்த சமயத்தில் அதிரடி இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில் தற்போதும் கூட ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷிவம் துபே, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா என நிறைய இடதுகை பேட்ஸ்மேன் ஆப்ஷன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.