Homeகிரிக்கெட்விருப்பம் இல்லாட்டி என்ன உ.கோ-கு அனுபாதிங்க... இந்த மோசமான விளையாட்டுல நான் இருக்க விரும்பல -...

விருப்பம் இல்லாட்டி என்ன உ.கோ-கு அனுபாதிங்க… இந்த மோசமான விளையாட்டுல நான் இருக்க விரும்பல – வங்கதேச வாரியத்தை கடுமையாக விமர்சித்த தமீம் இக்பால்

-Advertisement-

இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது துவங்கவுள்ள வேளையில் அனைத்து அணிகளும் தற்போது இந்தியாவிற்கு வந்தடைந்து பயிற்சி போட்டிகளில் விளையாட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பங்களாதேஷ் அணியும் இந்தியா வந்து பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் அந்த அணியின் அனுபவ துவக்க வீரரான தமீம் இக்பால் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய தமீம் இக்பால் கூறுகையில் : வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் குழுவில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் என்னை அழைத்தார். நீங்கள் உலக கோப்பைக்கு சென்றால் உங்களது முதுகு காயத்தையும் சமாளித்து போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறி மேலும் அப்படி நீங்கள் விளையாட வேண்டும் என்றால் ஒரு விடயத்தை செய்தால் நல்லது என சொல்லி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் விளையாட வேண்டாம் என்று தெரிவித்ததாக தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் தமிழ் இக்பால் கூறியிருந்தார்.

-Advertisement-

மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு இன்னும் 10-12 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்று நான் பதில் அளித்தேன். மேலும் இந்த பத்து பன்னிரண்டு நாட்களில் நான் நல்ல நிலையில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை பெறுவேன் என்றும் கூறி பிறகு நான் ஏன் விளையாட கூடாது என்று கேள்வி எழுப்பினேன்.

அதற்கு அவர் அப்படியே நீங்கள் விளையாடினாலும் ஆர்டரை மாற்றி கீழ் வரிசையில் தான் பேட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இதை கேட்ட பிறகு நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் என்னுடைய 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எப்போதும் கீழ் வரிசையில் விளையாடியது கிடையாது.

-Advertisement-

ஆனால் இப்பொழுது என்னை அவர்கள் கட்டாயப்படுத்துவதாக உணர்கிறேன். இப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தால் என்னை அனுப்ப வேண்டாம். நான் இந்த குழப்பத்தோடு விளையாட விரும்பவில்லை. இந்த மோசமான கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை என கூறியதாகவும் தமீம் இக்பால் கூறியுள்ளார். அதோடு இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து தான் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் குவித்த அவர் மீண்டும் தற்போது தான் பார்மிற்கு வர தொடங்கியிருந்தார். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஓய்வினை அறிவித்த அவர் மீண்டும் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று விளையாடி வந்த வேளையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளது அனைவரது மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்