- Advertisement -
Homeவிளையாட்டுபதிரனாவுக்கும் தமிழ் சீரியல் நடிகைக்கும் காதலா? நடிகை வெளியிட்ட பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்.

பதிரனாவுக்கும் தமிழ் சீரியல் நடிகைக்கும் காதலா? நடிகை வெளியிட்ட பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்.

- Advertisement-

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இளம் வீரரான மதீஷா பதிரனா கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மலிங்கா போலவே பவுலிங் ஆக்‌ஷன் கொண்ட அவர் மலிங்கா போலவே யார்க்கர்களை வீசி விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

இந்த சீசன் முழுவதும் தோனியின் செல்ல பிள்ளையாக வலம் வந்த  அவருக்கு தோனி பல வழிகளில் அறிவுரைகள் சொல்லி காட்பாதராக இருந்து வழிநடத்தினார். கிரிக்கெட்டுக்கு வெளியேயும் தோனி, அவருக்கு நல்ல வழிகாட்டியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

பதிரனாவின் குடும்பத்தினர் தோனியை சந்தித்த போது அவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னதாக பதிரனாவின் சகோதரி தெரிவித்திருந்தார். மேலும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “இலங்கை அணிக்காக பதீரனா எனும் வைரத்தை தோனி பட்டை தீட்டி வருகிறார் “ என்று வர்ணனையின் போது பேசினார்.

சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதும் பல தரப்புகளில் இருந்து அணிக்கு வாழ்த்துகள் குவிந்தன. அதில் தமிழ் சீரியல் நடிகையான நேஹாவும் ஒருவர். இந்த நிலையில் “Matheesha Pathirana is love” என்ற தலைப்போடு அவர் பதிவிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலானது.

- Advertisement-

இதையடுத்து நேஹாவும் பதிரனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூகவலைதளங்களில் பல பதிவுகள் பரவ, அதில் ஒன்றைப் பகிர்ந்த நேஹா “சிரிக்குறதா அழுவறதான்னு கூட தெரியலடா அப்பா.. வொர்ஸ்ட் பிஹேவியர்” என கிசுகிசுக்களுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னதாக ஐபிஎல் போட்டி நடக்கும் போதே பதிரனாவுக்கு ப்ரபோஸ் செய்தார் ஒரு பெண். என்னை போல ஒரு இந்திய பெண்ணை பதிரனா திருமணம் செய்துகொண்டால் அவர் இந்திய குடியுரிமை பெற்றுக்கொண்டு இந்திய அணிக்கு ஆடலாம் இல்லையா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவு அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்