- Advertisement 3-
Homeவிளையாட்டு85 ரன்களுக்கு ஆல் அவுட்.. மிரட்டிய நடராஜன்.. கம்பேக்னா இதுதான்.. பெங்கால் அணியை வீழ்த்திய தமிழ்நாடு

85 ரன்களுக்கு ஆல் அவுட்.. மிரட்டிய நடராஜன்.. கம்பேக்னா இதுதான்.. பெங்கால் அணியை வீழ்த்திய தமிழ்நாடு

- Advertisement 1-

ஐபிஎல் தொடருக்கு பின் தமிழக வீரர் நடராஜன் காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார். திருச்சி அணிக்காக டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கிய போதும் நடராஜன் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கு அவரின் காலில் ஏற்பட்ட காயமே காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் தமிழக ரசிகர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் நடராஜனின் செயல்பாடுகள் அபாரமாக உள்ளது. விஜய் ஜசாரே தொடரின் மூன்றாவது சுற்றில் தமிழ்நாடு அணி விளையாடி வருகிறது. இதில் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ளதால், வலிமை வாய்ந்த பெங்கால் அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது.

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்கால் அணிக்காக ஈஸ்வரன் – அபிஷேக் போரல் கூட்டணி களமிறங்கியது. நடராஜன் வீசிய முதல் ஓவரிலேயே ஈஸ்வரன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஆகாஷ் தீப் 3வது ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

நடராஜன் ஒருபக்கம் மிரட்டலான பந்துவீச, இன்னொரு பக்கம் சந்தீப் வாரியர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் சேர்ந்து பெங்கால் அணி 42 ரன்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி திணற வைத்தனர். இதன்பின் பெங்கால் அணி மொத்தமாக 23.4 ஓவர்களில் வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

- Advertisement 2-

சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும், அபராஜித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்பின் எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 8 ரன்காளிலும், தொடர்ந்து வந்த பாபா அபராஜித் 4 ரன்களிலும், விஜய் சங்கர் 2 ரன்களிலும் ஜெகதீசன் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால் நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாரூக் கான் – இந்திரஜித் கூட்டணி இணைந்து வெற்றியை தேடி கொடுத்தது. 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

சற்று முன்