- Advertisement 3-
Homeவிளையாட்டுதப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. கோலிக்கு எதிரா வங்காளதேச பவுலர் பாத்த வேலை.. அடுத்த சீரிஸ்ல என்ன...

தப்பு பண்ணிட்டியே சிங்காரம்.. கோலிக்கு எதிரா வங்காளதேச பவுலர் பாத்த வேலை.. அடுத்த சீரிஸ்ல என்ன ஆகப்போகுதோ..

- Advertisement 1-

நடப்பு டி20 தொடரில் போட்டிகள் விராட் கோலிக்கு பெரிதாக அமையவில்லை என்றே சொல்லலாம். மொத்தம் உள்ள நான்கு லீக் போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆடியிருந்த இந்திய அணி அவை அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அதற்கான பெரிய பங்கு இந்திய அணியின் பந்து வீச்சாளர்களால் தான் அமைந்திருந்தது என்ற சூழலில் பல பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்கவே தடுமாறி இருந்தனர்.

அதிலும் விராட் கோலி அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக ஆடிய போதிலும் மொத்தமாக ஐந்து ரன்கள் மட்டும் தான் மூன்று போட்டிகளில் சேர்த்து எடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு எதிராக அவர் டக் அவுட்டாகி இருந்தது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது.

ஐபிஎல் தொடர் மற்றும் கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை என அனைத்திலும் அதிக ரன்கள் அடித்திருந்த விராட் கோலியால் டி20 உலக கோப்பையில் சிறிய அணிகளுக்கு எதிராக கூட நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது ஏன் என்பதே பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சூப்பர் 8 போட்டியிலும் அரை இறுதி போட்டிகளிலும் நிச்சயம் இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல தனது பேட்டிங்கை மேம்படுத்தி வருகிறார் விராட் கோலி.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்த அவர், வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து இருந்தார். சிக்ஸர்களையும் பறக்க விட்டிருந்த கோலி, தனது ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனத்திற்கும் பதில் கூறி உள்ளார்.

- Advertisement 2-

இதனால், ஆஸ்திரேலியா மற்றும் அரை இறுதி போட்டிகளிலும் விராட் கோலியின் பழைய பேட்டிங்கை பார்க்கலாம் எனத ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அப்படி இருக்கையில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் கோலியை விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் தன்ஸீம் ஹாசன் சாகிப், கொண்டாடிய விதம் பலரையும் கோபப்படுத்தியுள்ளது.

ஆக்ரோஷத்திற்கு பெயர் போன விராட் கோலியை போல்டாக அவுட் எடுத்து இருந்த ஹாசன் ஷாகிப், உடனே இந்த விக்கெட்டை மிக ஆக்ரோஷமாக கத்தியபடி கொண்டாட இதனை விராட் கோலி கவனித்தபடி வெளியேறி இருந்தார். பொதுவாக தன்னை அவுட் எடுக்கும் பந்து வீச்சாளர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் செயல்படுத்தினால் அவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுக்க தவற மாட்டார் விராட் கோலி.

இதனால் இனிமேல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியா ஆடும் தொடரில் தன்ஷீப் ஹாசனை விராட் கோலி எதிர்கொள்ளும் போது நிச்சயம் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதே மாதிரி ஆக்ரோஷமாக செயல்படுத்தி ஒரு பதிலடியை விராட் கோலி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்