ஆசியாவில் தலைசிறந்த அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை போட்டியானது 1984 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 முறை இந்த தொடரானது நடைபெற்றுள்ளது. 2022 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணி இதுவரை ஆசியக் கோப்பை போட்டியை 6 முறையும், இந்திய அணி அதிகபட்சமாக 7 முறையும் வென்றுள்ளது. கடந்த முறை இறுதி வரை முன்னேறி கோப்பையை வெல்ல தவறிய பாகிஸ்தான் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தனது வீரர்களை மாற்றியுள்ளனர். பாகிஸ்தான் அணி சிறந்த பேட்டிங் , சிறந்த பௌலிங் என அனைத்து தரப்பிலும் வலுவாக இருந்தது வருகிறது. அந்த அணியில் ஆல்ரவுண்டரகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த அணி தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் தய்யப் தாஹிர்-க்கு பதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான சவுத் ஷகிலை அணியில் இணைத்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான முன்னோட்டமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் இருதரப்பு தொடரில் இலங்கையில் ஆடியது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி தொடரை வென்றுள்ளது, அந்த தொடரில் ஷகீல் இரண்டு ஆட்டங்களில் ஆட வாய்ப்பு கிட்டவில்லை. கடைசி போட்டியில் மிடில் ஆர்டரில் ஆட அவருக்கு வாய்ப்பு கிட்டியது.
அந்த ஆட்டத்தில் அவர் 2 பவுண்டரி மட்டுமே அடித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை கொண்டு அணி நிர்வாகம் இவரை அணியில் சேர்த்துள்ளது. இவருக்கு அவ்வளவாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத போதும் இவரை அணியில் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார் என முதலில் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அணி நிர்வாகம் அந்த முடிவை நிறுத்திவைத்துள்ளது. இவர் இலங்கை அணிக்கான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்ததன் மூலம் அவர் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம் பிடித்துள்ளார்.
27 வயதான ஷகீல் இதுவரை 5 இன்னிங்ஸில் 76 ரன்களை எடுத்துள்ளார். எனினும் இடது கை ஆட்டக்காரரான இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆவரேஜ் வைத்துள்ளார். இவர் நம்பர் 5 இடத்தில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு மிடிலார்டரில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து அந்த அணி இரு கட்டம் வரை செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது.
ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபகார் ஜமான், அப்துல்லா ஷபீக், ஃபஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், இமாம் உல் ஹக், முகமது ஹாரிஸ், முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சவுத் ஷகீல், நசீம் ஷா, சல்மான் அலி ஆகா, ஷஹீன் அப்ரிடி மற்றும் உசாமா மிர். ரிசர்வ் வீரர்: தயாப் தாஹிர்