- Advertisement 3-
Homeவிளையாட்டுஉ.கோ இந்திய அணி அறிவிப்பு... அதிரடி மாற்றம்.. வெளியே சென்ற முக்கிய வீரர்... உள்ள வந்துள்ள...

உ.கோ இந்திய அணி அறிவிப்பு… அதிரடி மாற்றம்.. வெளியே சென்ற முக்கிய வீரர்… உள்ள வந்துள்ள சூப்பர் வீரர்

- Advertisement 1-

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய மற்றும் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தங்களது இறுதியான ஸ்குவாடை அறிவித்துள்ளது.

இன்று இரவு 12 மணிக்குள் அணியை அறிவித்தாக வேண்டும் என்ற நிலையில் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும், இந்திய அணி எப்படி இருக்கும், அதன் ஸ்குவாடில் யாரெல்லாம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஆவலோடு காத்திருந்தனர்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு இந்தியா தனது இறுதியான அணியை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆசியக் கோப்பை போட்டியின் போது இந்தியா ஒரு அணியை அறிவித்திருந்தது. அதிலிருந்து ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் தற்போது இந்திய அணி செய்துள்ளது.

சர்துல் தாக்கூர் அணிக்கு தேவையா போன்ற விவாதங்கள் ஏற்கனவே எழுந்திருந்தது. அதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த மாற்றம் எதுவும் நடக்கவில்லை. ஆசிய கோப்பை போட்டியின் போது காயமடைந்த அக்சர் பட்டேல் தான் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement 2-

அக்சர் பட்டேலுக்கு பதிலாக பலரும் எதிர்பார்த்த இந்திய அணியின் சுழல் பந்து ஜாம்பவானான அஸ்வின் தற்போது இறுதி அணியில் இடம் பெற்றுள்ளார் அந்த வகையில் 15 பேர் கொண்ட இந்திய அணியின் விவரம் இதோ.

  • ரோஹித் சர்மா (கேப்டன்)
  • ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
  • சுப்மன் கில்
  • விராட் கோலி
  • ஸ்ரேயாஸ் ஐயர்
  • கேஎல் ராகுல்
  • ரவீந்திர ஜடேஜா
  • ஷர்துல் தாக்கூர்
  • ஜஸ்பிரித் பும்ரா
  • முகமது சிராஜ்
  • குல்தீப் யாதவ்
  • முகமது ஷமி
  • ரவிச்சந்திரன் அஷ்வின்
  • இஷான் கிஷன்
  • சூர்யகுமார் யாதவ்

ஏற்கனவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அஸ்வின் பிலேயிங் 11ல் இடம் பெறாமல் இருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தி நிலையில் அவர் தற்போது இந்திய அணியில் இடப்பெற்றுள்ளதை பலரும் வரவேற்கின்றனர்.

சற்று முன்