- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணியில் சேர்க்கப்பட்ட ருதுராஜ், அஸ்வின்... வெளியான அதிரடி ஸ்குவாட்... ஆட்டம் இப்போவே கலகட்டுதே....

இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ருதுராஜ், அஸ்வின்… வெளியான அதிரடி ஸ்குவாட்… ஆட்டம் இப்போவே கலகட்டுதே….

- Advertisement 1-

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆறு அணிகள் பங்கேற்று விளையாடிய ஆசிய கோப்பை தொடரானது அண்மையில் இலங்கையில் நிறைவடைந்த வேளையில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை எட்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.

அதனை தொடர்ந்து இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளதால் இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியானது பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளில் அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் காரணமாக அண்மையில் பாதிக்கப்பட்ட அக்சர் பட்டேலுக்கும் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கூடுதலாக குல்தீப் யாதவிற்கும் முதல் இரண்டு போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதோடு மூன்றாவது போட்டியிலும் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement 2-

மேலும் முதல் இரண்டு போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும், திலக் வர்மாவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இதோ: 1) கே.எல் ராகுல், 2) ரவீந்திர ஜடேஜா, 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சுப்மன் கில், 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) திலக் வர்மா, 8) இஷான் கிஷன், 9) ஷர்துல் தாகூர், 10) வாஷிங்டன் சுந்தர், 11) அஷ்வின், 12) பும்ரா, 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) பிரசித் கிருஷ்ணா

கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இதோ : 1) ரோஹித் சர்மா, 2) ஹார்டிக் பாண்டியா, 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) கே.எல் ராகுல், 8) இஷான் கிஷன், 9) ரவீந்திர ஜடேஜா, 10) ஷர்துல் தாகூர், 11) அக்சர் பட்டேல், 12) வாஷிங்டன் சுந்தர், 13) குல்தீப் யாதவ், 14) அஷ்வின், 15) பும்ரா, 16) முகமது ஷமி, 17) முகமது சிராஜ்.

சற்று முன்