- Advertisement -
Homeவிளையாட்டுஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலககோப்பை தொடருக்கு தகுதிபெற - என்ன...

ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலககோப்பை தொடருக்கு தகுதிபெற – என்ன செய்ய வேண்டும்?

- Advertisement-

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற வேளையில் தற்போது மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த 10 அணிகளில் இரண்டு அணிகள் தகுதி பெற்று முதன்மை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும்.

அந்த வகையில் இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபால் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு செல்லும். பின்னர் சூப்பர் 6 சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.

அந்த வகையில் கடந்த 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டுமுறை 50 உலகக் கோப்பையை வென்ற ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டிஸ் அணி இம்முறை உலகக்கோப்பை சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறாமல் தகுதி சுற்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தகுதி சுற்று போட்டியில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதன்மை உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு ஜிம்பாப்வே அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

- Advertisement-

இந்நிலையில் சூப்பர் 6 சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் உலககோப்பை தொடருக்கு தேர்வாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதன்படி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு தோல்வியை சந்தித்தாலும் இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 3 போட்டிகள் எஞ்சியுள்ளது. அந்த மூன்று போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று ஜிம்பாப்வே அணி சூப்பர் 6 சுற்றில் ஏதாவது ஒரு அணியிடம் தோல்வியை சந்திக்க வேண்டும் அது நடந்தால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால் உலககோப்பை முதன்மை சுற்றுக்கு தகுதி அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்