- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித், டிராவிட் இல்ல.. ஜூரேல், படிக்கல் அறிமுகமாக காரணமா இருந்த ஒரே ஒருவர்.. வியந்து பார்க்கும்...

ரோஹித், டிராவிட் இல்ல.. ஜூரேல், படிக்கல் அறிமுகமாக காரணமா இருந்த ஒரே ஒருவர்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

- Advertisement 1-

இனிமேல் எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் இந்திய அணி அதனை தைரியமாக எதிர்கொள்ளும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தது சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடர். இந்த தொடரில் கோலி, முகமது ஷமி, கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதாக இடம்பெறாமல் போக இந்திய அணியில் சிறிய குழப்பம் இருந்தது. ஆனால் இந்த ஒரே தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகியிருந்த போதிலும் இங்கிலாந்து போன்ற பெரிய அணியை மிக அசால்டாக டீல் செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

அதிலும் சர்பாரஸ் கான், ஜெய்ஸ்வால், படிக்கல், துருவ் ஜூரேல், ஆகாஷ் தீப் என இதுவரை டெஸ்ட் தொடரில் அதிகம் ஆடாத வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையிலும் கூட அவர்கள் மிக நேர்த்தியாக இந்த தொடர் முழுக்க நெருக்கடி எதுவும் இல்லாமல் ஆடி இருந்தனர். சீனியர் வீரர்கள் இல்லாமல் போனது நிஜத்திலே இந்திய அணிக்கு பின்னடைவாக தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடர் மற்றும் முதல் தர தொடர்கள் அனுபவம் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த இளம் வீரர்கள் இங்கிலாந்து அணியை ஒரு கை பார்த்து விட்டனர்.

இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து சாதனை புரிந்த ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் இருக்க அவரைப் போலவே சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் என பலரும் பேட்டிங்கில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்திருந்தனர். ஆரம்பத்தில் இந்திய அணியை விமர்சித்த பலரும் இளம் வீரர்களின் செயல்பாடு கண்டு பின்னர் ஒரு நிமிடம் வாயடைத்து போயினர். அதே வேளையில் பேஸ் பால் ஆட்டம் என்ற பெயரில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து மீது தான் விமர்சனங்களும் தொடர் முடிவிற்கு பின்னர் அதிகமாக இருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் இளம் வீரர்கள் இந்த தொடரில் கால் பதிக்க முக்கிய காரணமாக இருந்த ஒருவரை பற்றி பார்க்கலாம். துருவ் ஜூரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இந்த தொடரில் அறிமுகம் செய்வதற்கு அணி நிர்வாகத்தினர் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement 2-

ஆனால் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் பந்துவீச்சாளருமான அஜித் அகர்கர் தான் மிக தைரியமாக துருவ் ஜூரேலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் நிர்வாகத்தினரை சமரசம் செய்தார். ஜூரேலை போல மற்றொரு அதிக அனுபவம் இல்லாத வீரரான படிக்கல் இந்த தொடரில் அறிமுகம் செய்வதற்கும் அகர்கர் தான் சமரசம் செய்து வைத்திருந்தார்.

அப்படி அஜித் அகர்கரால் இந்த தொடரில் அறிமுகமான இரண்டு இளம் வீரர்களும் அவர் வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அதனை நிஜமாக்கி காட்டி உள்ளனர்.

சற்று முன்