தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் ஏழாவது சீசன் பாதிக் கட்டத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்த சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தோல்வி அடையாத ஒரே அணியாக உள்ளது. இந்த அணி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நான்கு முறை TNPL சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது தொடக்க இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருப்பினும், அவர்கள் தங்கள் கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் பல இளம் வீரர்கள் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் கலக்கிய வீரர்கள் சிலர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 3 வீரர்கள் பற்றிய பார்வை.
பாபா அபராஜித்
28 வயதாகும் பாபா அபராஜித், கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த வீரராக உள்ளார். 2013-15ல் சிஎஸ்கே அணியிலும், பின்னர் 2016 மற்றும் 2017ல் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியிலும் இடம் பெற்றிருந்தாலும், அபராஜித் ஐபிஎல்லில் இதுவரை ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை.
டிஎன்பிஎல் தொடரை பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டில், அபராஜித் ஒன்பது போட்டிகளில் 56.57 சராசரி மற்றும் 144.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 396 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் நான்கு ஆட்டங்களில் 145.04 ஸ்டிரைக்கில் 53.67 என்ற சராசரியை அவர் கொண்டுள்ளார்.
அபிஷேக் தன்வர்
தீபக் சாஹர் மற்றும் முகேஷ் சவுத்ரி போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதி பிரச்சினைகளை கருத்தில் கொண்டு CSK பார்க்கக்கூடிய மற்றொரு விருப்பமாக அபிஷேக் தன்வார் இருப்பார். 2015-2016 சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாட்டிற்காக தனது டி20 அறிமுகத்தை செய்த போதிலும், TNPL இல் கடந்த இரண்டு சீசன்களில் தன்வார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ரைட் ஆர்ம் மீடியம் பேசரான அவர் கடந்த TNPL-ஐ காட்டிலும் இந்த சீசனில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். இந்த முறை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தி ஏழுக்கும் குறைவான எக்கானமி ரேட்டை வைத்துளார். அதே போல பவர்பிலேயில் இவருடைய எக்கானமி ஐந்திற்கும் குறைவாக உள்ளது. அதோடு இவர் லோவர் ஆடரில் நன்கு விளையாட கூடிய பேட்ஸ்மேனும் கூட.
அபிஷேக் குருசாமி
TNPL இன் சமீபத்திய பேட்டிங் சென்சேஷனாக இருப்பவர் நெல்லை ராயல் கிங்ஸைச் சேர்ந்த 20 வயதான குருசாமி அஜிதேஷ். லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக 60 பந்துகளில் 112 ரன்களை இவர் விளாசினார்.
வலது கை பேட்ஸ்மேனான அபிஷேக் கடந்த சீசனில் ஆறு போட்டிகளில் 243.39 என்ற ஸ்டிரைக் ரேட்டில் சராசரியாக 43 ஆக இருந்தார். இந்த சீசனில், ராயல் கிங்ஸ் முதல் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு திறமையான பேட்டரை நம்பர் 3 க்கு நகர்த்த முடிவு செய்தது, அதன் பிறகு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளன.
இந்த சீசனில் தற்போதுவரை அவர் 185 ரன்களை எடுத்து அதிக ரன்கள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருடைய ஆவெரேஜ் 61.66 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 160 ஆகவும் உள்ளது.