Homeவிளையாட்டுதிருப்பதி கோவிலில் 100 கோடி மோசடி செய்த ஆசாமி கைது

திருப்பதி கோவிலில் 100 கோடி மோசடி செய்த ஆசாமி கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார். அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

சற்று முன்