- Advertisement -

பும்ராவுக்கு சமமான பவுலர்.. சிராஜை விட பெஸ்ட்.. ஆனாலும் இந்திய அணியில் இடம் கிடைக்கல.. ரசிகர்களே மறந்த வீரர்..

கடந்த ஆண்டு இந்தியாவில் வைத்து நடந்த ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் ஒரு தோல்வியை கூட காணாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்திருந்தனர்.

இதனிடையே, டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ள நிலையில், இதற்கான அணியையும் அவர்கள் தற்போது அறிவித்திருந்தனர். ஐபிஎல் தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான சில வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பது பற்றியும் ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் உலக கோப்பை தொடர்களில் பெரிதும் இடம்பெறாமல் இருந்த சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே, சாஹல் என பலரும் டி20 உலக கோப்பைக்காக தேர்வாகி உள்ளனர். ஆனால் அதே வேளையில் சில முக்கியமான வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெறாமல் போனதுதான் தற்போது பிசிசிஐ மீதான அதிருப்தியை அதிகப்படுத்தி உள்ளது.

டி 20 போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளங்கிவரும் ரிங்கு சிங்கை ரிசர்வ்டு வீரராக தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல கே எல் ராகுலும் இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. இந்த இரண்டு பேருமே இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனியாக நின்று போராடி ரன் சேர்த்துள்ளவர்கள்.

- Advertisement -

அதேபோல தமிழக வீரர்கள் நடராஜன், சாய் சுதர்சன் உள்ளிட்டோரும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தான், ரசிகர்கள் யாருமே பெரும்பாலும் குறிப்பிடாத ஒரு வீரரை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல் தொடரில் விளையாடி 150 மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் தான் சந்தீப் ஷர்மா.

இவரது சராசரி, எக்கனாமி உள்ள அனைத்து விஷயங்களும் அற்புதமாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இவர் நான்கு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியும் சாதனை புரிந்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த பந்துவீச்சாளராக ஏறக்குறைய பும்ராவுக்கு நிகராக இருந்தும் இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகள் மட்டுமே அவர் ஆடியுள்ளார்.

தொடர்ந்து இவருக்கான சர்வதேச வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கும் சூழலில், ஐபிஎல் தொடரில் நல்லதொரு பந்து வீச்சாளராக இருந்தும் ஏன் அவரை தொடர்ந்து இந்திய அணி புறம் தள்ளி வருகிறது என்பதே புரியாத புதிராக உள்ளது.

டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணியில் தேர்வாகியுள்ள அர்ஷதீப் சிங் மற்றும் சிராஜ் ஆகியோரை விட சிறப்பாக பந்து வீசும் வல்லமை நிச்சயம் சந்தீப்பிடம் உள்ளது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது. அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் நிச்சயமாக அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை பிசிசிஐ அழித்து விட்டது என்றும் கொந்தளிப்புடன் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Recent Posts