- Advertisement 3-
Homeவிளையாட்டுகேப்டனுக்கு இப்படியெல்லாமா ஐஸ் வைக்கிறது.. மைதானத்தில் அநியாயம் செய்த திலக் வர்மா!

கேப்டனுக்கு இப்படியெல்லாமா ஐஸ் வைக்கிறது.. மைதானத்தில் அநியாயம் செய்த திலக் வர்மா!

- Advertisement-

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார் திலக் வர்மா. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் என்றாலும் திலக் வர்மாவை மும்பை அணி நிர்வாகம் கெட்டியாக பிடித்து கொண்டுள்ளது. மும்பை அணியின் மிடில் ஆர்டரை தாங்கும் வீரராக குறுகிய காலத்திலேயே திலக் வர்மா நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்கிடைத்தது. முதல் போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார்.

- Advertisements -

இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 39 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், கேமராவை பார்த்து குழந்தையுடன் விளையாடுவதை போல் கொண்டாடினார். இதனால் திலக் வர்மாவின் கொண்டாட்டம் யாரை குறிக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினர்.

இதுதொடர்பாக திலக் வர்மா பேசும் போது, நானும் ரோகித் சர்மாவின் மகளும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அப்போது விளையாடும் போது, சர்வதேச கிரிக்கெட்டில் எப்போது முதல் சதம் அல்லது முதல் அரைசதம் அடித்தாலும் உனக்கு அர்ப்பணிப்பேன் என்று சமைராவிடம் சத்தியம் செய்திருந்தேன்.

- Advertisement-

அதனால் எனது முதல அரைசதம் விளாசிய பின், சமைராவுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கொண்டாடினேன். எனது முதல் ஐபிஎல் தொடரிலேயே ரோகித் சர்மா என்னை கவனமாக பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு முறையும் என்னை, டி20 மட்டுமல்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான வீரராக இருப்பதாக பாராட்டுவார்.

எப்போதுமே சுரேஷ் ரெய்னாவை பார்த்து தான் வளர்ந்துருக்கிறேன். அதன்பின் ரோகித் சர்மா அளித்த ஊக்கம் எனக்கு களத்திலும், களத்திற்கு வெளியேயும் உதவியாக உள்ளதாக கூறினார். குடும்பம், நண்பர்களுக்காக வீரர்கள் சதங்கள் அர்ப்பணித்து வந்த நிலையில், திலக் வர்மா தனது கேப்டனின் மகளுக்கு அர்ப்பணித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

சற்று முன்