- Advertisement -
Homeவிளையாட்டுதிலக் வர்மாவோட இடம்.. ஒரே ஒரு தவறால் ரியான் பராக்கிற்கு கிடைத்த வாய்ப்பு.. கம்பீர் இருந்தும்...

திலக் வர்மாவோட இடம்.. ஒரே ஒரு தவறால் ரியான் பராக்கிற்கு கிடைத்த வாய்ப்பு.. கம்பீர் இருந்தும் மிஸ்ஸானது எப்படி..

- Advertisement-

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் சிறப்பாக ஆடியதால் டி20 உலக கோப்பை அணியில் தேர்வாவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதில் அவர் தேர்வாகாமல் போனது ஒரு பக்கம் இருக்க இன்னொரு புறம் தான் ஆடாமல் போனதால் உலக கோப்பையை இந்திய அணிக்காகவும் பார்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து கொண்டு இந்திய அணி மோதும் போட்டிகளை பார்க்க மாட்டேன் என கூறுவது எப்படி சரியாக இருக்கும் என அவரை ஏராளமான பேர் விமர்சனமும் செய்திருந்தனர். இதனிடையே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் ரியான் பராக் தேர்வாகிய நிலையில் பெரிய அளவில் தாக்கத்தை தனது பேட்டிங் மூலம் ஏற்படுத்தவும் தவறி இருந்தார்.

- Advertisement -

அப்படி இருந்தும் தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே தொடரில் அவரை விட சிறப்பாக ஆடிய அபிஷேக் ஷர்மா, ருத்துராஜ் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரியான் வாய்ப்பு பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை புறந்தள்ளிவிட்டு ஏன் ரியான் பராக் சேர்க்கப்பட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது. இதனால் இலங்கை அணிக்கு எதிராக ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை சிறப்பாக பயன்படுத்தி ரன் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் விமர்சனத்திற்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

- Advertisement-

ஆனால் ரியான் பராக்கின் இடத்தில் வேறொரு இளம் இவீரர் ஆட இருந்ததாகவும் ஒரு சில காரணங்களால் தான் அவரால் ஆட முடியாமல் போனதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்தி இருந்தார் இளம் வீரர் திலக் வர்மா. அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தாலும் தனியாளாக சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தியிருந்த திலக் வர்மா, கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகியிருந்தார்.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக தொடரிலும் திலக் வர்மா தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் தொடரில் காயம் அடைந்ததன் காரணமாக தற்போது அவருக்கான வாய்ப்பு பறிபோனதால் அதனை ரியான் பராக் தட்டி தூக்கி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திலக் வர்மா இல்லாமல் போனதால் மிடில் ஆர்டரில் பேட்டிங் பிரச்சனை இருக்க அந்த இடத்தில் சரியாக இருக்கும் ரியான் பராக்கை இந்திய நிர்வாகம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்