- Advertisement 3-
Homeவிளையாட்டுஎல்லாமே உன் இஷ்டத்துக்கு தானா.. உன்னால அவனுக்கு எவ்ளோ பெரிய கஷ்டம்... ஸ்டோக்ஸ்சை அதிரடியாக விமர்சித்த...

எல்லாமே உன் இஷ்டத்துக்கு தானா.. உன்னால அவனுக்கு எவ்ளோ பெரிய கஷ்டம்… ஸ்டோக்ஸ்சை அதிரடியாக விமர்சித்த முன்னாள் கேப்டன்

- Advertisement 1-

உலகக் கோப்பை தொடரானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அணிகளும் தங்களது வீரர்களை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பையில் விளையாடுவதற்காக தனது ஓய்வை திரும்பப் பெற இருக்கிறார் என்ற ஒரு செய்தி சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

கடந்த வருடம் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக அவர் கூறியது, தனது உடல் ஒத்துழைக்கவில்லை என்றும், அணிக்காக பல இளம் வீரர்கள் விளையாட வேண்டி இருக்கிறது என்றும், அதனால் தான் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அவர் கூறி தனது ஓய்வை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்த அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்டு தொடரை விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களை இங்கிலாந்து அணி வெளியிட்டுள்ளது. அதில் பென் ஸ்டோக்சின் பெயர் விடும் பெற்றுள்ளது. இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் திரும்புகிறார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிருவாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தான் அவர் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதாக கூறப்படுகிரியாது. இதனிடையே பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு நாள் போட்டிக்கு திரும்பியது ஒரு வகையில் நல்லதாக இருந்தாலும், அவர் இடத்தில் இதுநாள் வரை விளையாடி வந்த வீரர் ஒருவர் தற்போது வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement 2-

அப்படி வெளியேறக் கூடிய வீரராக ஹாரி புரூக் உள்ளார். இவர் இங்கிலாந்து அணியின் வளர்ந்து வரக்கூடிய இளம் வீரராக உள்ளார். பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து விலகிய பிறகு ஹாரி புரூக் தான் அவர் இடத்தில் வெகு காலம் விளையாடி வந்தார். இந்தநிலையில் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான டிம் பெயின் கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது குறித்து நான் கேள்விப்பட்டேன். அது நிச்சயம் சுவாரஸ்யமான ஒரு தகவல் தான்.

நான் எதில், எப்போது, எங்கு விளையாட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். அதனால் நான் இல்லாத சமயத்தில் அணிக்காக விளையாடிய வீரர் நீங்களாகவே போய் பென்சில் அமர்ந்து கொள்ளுங்கள் என்பது போல் உள்ளது அவர் அணிக்கு திரும்பிய தருணம் என்று பென் ஸ்டோக்ஸ் மீது டிம் பெயின் சமீபத்தில் ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

சற்று முன்