- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வின், ஜடேஜா செஞ்ச அந்த தப்பை நான் செய்யல.. இங்கிலாந்து ஜெயிக்க காரணமாக இருந்த பவுலர்...

அஸ்வின், ஜடேஜா செஞ்ச அந்த தப்பை நான் செய்யல.. இங்கிலாந்து ஜெயிக்க காரணமாக இருந்த பவுலர் சொன்ன ரகசியம்..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பல சாதனைக்கு சொந்தக்காரராகும் என பார்த்தால் தோல்வியடைந்து பல மோசமான சாதனையையும் தங்கள் வசமாக்கியுள்ளது. 100 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்து இந்திய அணி தோல்வி அடைந்த முதல் டெஸ்டாக இது மாறி உள்ளது.

இதே போல, ஹைதராபாத் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் இதுதான் முதல் முறை. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக தான் செயல்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை மூன்றாவது நாளில் முடியும் என நினைத்த போட்டியில் அந்த நாளில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஒல்லி போப், அனைத்தையுமே மாற்றியமைத்தார்.

இங்கிலாந்து மண்ணில் ஆடுவது போல இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்த போப், 196 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இது மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி, 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏழு விக்கெட்டுகளை கழற்றி அவர்களை நிலைகுலையவும் வைத்திருந்தார். இதனால் இந்திய அணி 28 ரன்களில் தோல்வியை தழுவ, ஒரு வெற்றியை கூட பெறாது என விமர்சித்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வென்று தொடரிலும் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியை விமர்சித்த பலரும் தற்போது இந்திய அணி இப்படி எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்ததை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். 230 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி அதை எட்டாமல் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி.

- Advertisement 2-

இங்கிலாந்தின் வெற்றிக்கு பின்னர் பேசிய டாம் ஹார்ட்லி, “இதனை என்னால் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து பெரிய அளவில் திரும்பாததால் என்னால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. என்னுடைய பந்துவீச்சும் கொஞ்சம் கடினமாக இருந்தது. அப்போது ஸ்டோக்ஸ், மெக்கல்லம் மற்றும் அணி நிர்வாகத்திடம் நான் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டேன்.

பின்னர் கேப்டன் ஸ்டோக்ஸ் சொன்ன வழியில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தேன். இரண்டாவது இன்னிங்சில் ஒரு அளவுக்கு நன்றாக பேட்டிங் செய்தது பிட்ச்சின் தன்மையை தெரிந்து கொள்ளவும் உதவியது. இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்து வீசும் போது அவர்கள் வேகமாக வீசியிருந்தனர். இதனால் நாம் அது போன்று வேகமாக பந்து வீச கூடாது என என்னுடைய லென்த்தை சரி செய்து கொண்டு மெதுவாக பந்துவீசி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் எடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்