விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 25,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதே போல 76 சதங்களை அடித்து சச்சினுக்கு அடுத்த நிலையில் உள்ளார். டெஸ்ட், ஒன்டே, டி20 என மூன்று ஃபார்மட்டுகளிலும் அசத்தி வரும் விராட் கோலி ரன் மெஷின் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8676 ரன்களையும்,
ஒருநாள் போட்டிகளில் 275 ஆட்டங்களில் 12,898 ரன்களையும், 115 டி20 ஆட்டங்களில் 4008 ரன்களையும் குவித்துள்ளர். களத்தில் இவரது ஆட்டம் எதிரணியினரை திக்கு முக்காட செய்து விடும், அந்த அளவு இவரது ஆட்டம் உஷ்ணமாக இருக்கும்.
தனது பதினைந்து வருட கிரிக்கெட் உலகில் விராட் கோலி உலகில் உள்ள வேறு எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். எனினும் தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமும் சிறப்பாக செயல்பட்டு வருவது கிரிக்கெட் அறிஞர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. 28 வயதான பாபர் அசாம் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இதைப்பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி கூறியுள்ளார். விராட் கோலி தனது ஆட்டத்தை நன்றாக அறிந்து வைத்து ஆடுவதைப் போலவே பாபர் அசாமும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்
இதைப்பற்றி டாம் மூடி கூறுகையில்: பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் எனக்கு விராட் கோலியை ஞாபகப்படுத்துகிறார். எந்த ஆட்டத்தை எப்படி விளையாட வேண்டும் என்பதை பாபர் அசாம் நன்கு தெரிந்து வைத்துள்ளார். வீராத் கோலியை போன்றே இவரும் ரன்களை சேஸ் செய்வதில் வல்லவராக காணப்படுகிறார் எனவும் , வரவிருக்கும் ஆசிய கோப்பையில் அவருக்கு பெரும் சவால் காத்திருப்பதாகவும் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை 2023 வரும் ஆகஸ்ட் 30 அன்று தொடங்குகிறது. இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரே குரூப்பில் இடம்பெற்று செப்டம்பர் 3 அன்று பல்லேகலேவில் மோத உள்ளன. இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் இந்த வருடம் மூன்று முறைக்கும் மேலாக நேரடியாக மோத உள்ளன . இது இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக ரசிகர்கள் அனைவருக்கும் மாபெரும் விருந்தாக அமையும்.