- Advertisement -
Homeகிரிக்கெட்ஐபிஎல் 2023-ல் மக்களால் அதிகம் ரியாக்ட் செய்யப்பட்ட போஸ்ட் எது தெரியுமா? அதுலையும் சிஎஸ்கே தான்...

ஐபிஎல் 2023-ல் மக்களால் அதிகம் ரியாக்ட் செய்யப்பட்ட போஸ்ட் எது தெரியுமா? அதுலையும் சிஎஸ்கே தான் டாப். செம மாஸான போஸ்ட் தான் அது.

-Advertisement-

ஐபிஎல் 2023 சீசன், கிரிக்கெட் பிரியர்களுக்கு கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத ஒரு தொடராக இரண்டு மாதங்கள் நடந்து முடிந்துள்ளது. மே 29 ஆம் தேதி நடந்த ஒரு காவியமான இறுதிப் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

களத்தில் இருந்ததைப் போலவே, களத்திற்கு வெளியேயும், குறிப்பாக டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக அரங்கில் புதிய உயரங்களை ஐபிஎல் போட்டித் தொடர் எட்டியுள்ளது. சோசியல் மீடியாக்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் ஒரு விடயம் குறித்த மக்களின் ஈடுபாடு எப்படி உள்ளது என்பதை கணக்கிடும் ஒரு நிறுவனமாக காம்ஸ்கோர் நிறுவனம் உள்ளது.

- Advertisements -

இந்த காம்ஸ்கோர் நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஐபிஎல் 2023 தொடரானது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு பில்லியனிற்கும் அதிகமான மக்களால் ஆக்சன்(லைக், ஷேர், கமெண்ட், ரீட்வீட், லவ் ) செய்யப்பட்ட ஒரு தொடராக இருந்துள்ளது. அதே போல ஐபிஎல் சம்மந்தமான வீடியோக்களை பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனை பொறுத்தவரையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தான் சோசியல் மீடியாவில் அதிகபடியான சோசியல் மீடியா ஆக்சன் கொண்ட ஒரு அணியாக உள்ளது. இந்த அணி சார்ந்த பதிவுகளுக்கான ஆக்சன் இதவுரை 485 மில்லியன்களை கடந்துள்ளது. அதே வேலையில் இந்த ஒரு அணி மட்டும் 1187 பதிவுகளை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை ரசிபி அணி தான் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-Advertisement-

ரசிபி-யை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்தில் 366 மில்லியன் ஆக்ஷன்களோடு உள்ளது. இதற்க்கு அடுத்தபடியாக ஐபிஎல்-இன் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா ஹாண்டில்கள் 293 மில்லியன் ஆக்ஷன்களோடு உள்ளது. இந்த வரிசையில் சென்னை அணி ஐந்தாவது இடத்தில் 83 மில்லியன் ஆக்ஷன்களோடு உள்ளது.

இப்படி மொத்தமாக பார்க்கையில் சென்னை அணி ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், இந்த சீசனை பொறுத்தவரை அதிக ரியாக்‌ஷன்களை கொண்ட பதிவாக சென்னை அணியின் பதிவு உள்ளது. இந்த சீசனில் வெற்றிக்கு பிறகு தோனி, ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த படத்திற்கு மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஆக்ஷன்கள் வந்துள்ளது. இதுவே இந்த சீசனில் ஒரு போஸ்டிற்கு வந்த அதிகப்படியான ஆக்ஷன் என்று காம்ஸ்கோர் நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.

-Advertisement-

சற்று முன்