- Advertisement 3-
Homeவிளையாட்டு39 பந்தில் சாதனை சதம்.. அவங்க சொன்ன வார்த்தை தான் காரணம்.. சின்னசாமி ரகசியம் உடைத்த...

39 பந்தில் சாதனை சதம்.. அவங்க சொன்ன வார்த்தை தான் காரணம்.. சின்னசாமி ரகசியம் உடைத்த டிராவிஸ் ஹெட்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் வரலாறு காணாத ஒரு பேய் ஆட்டத்தை தான் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஆடி இருந்தது. இரு அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 287 ரன்கள் குவித்து தங்களின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்துள்ளனர். இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியும் கொஞ்சம் கூட துவண்டு போகாமல் ஹைதராபாத் அணிக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

நடுவே சில ஓவர்கள் பெங்களூர் ரன் சேர்க்க சிரமப்பட்டாலும் பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், தனி ஆளாக நின்று போட்டியை பெங்களூர் பக்கம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் அவருக்கான சிறந்த பார்ட்னர் கிடைக்காததன் காரணமாக தனியாக போராடியும் தோல்வி அடையும் நிலை தான் உருவாகியிருந்தது.

பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் மட்டுமே எடுக்க வெற்றிக்காக போராடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 83 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 39 பந்துகளில் சதமடித்து சாதனையும் புரிந்திருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத், மும்பைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் குவித்த போதும் வேகமாக அரைச்சதம் அடித்து ஹைதராபாத்தின் ரன் உயர்ந்ததற்கு முக்கிய பங்கு வகித்திருந்தார் ட்ராவிஸ் ஹெட். இதனால் மீதமுள்ள போட்டிகளில் அனைத்துமே இவரது பங்கு ஹைதராபாத் அணிக்கு பக்கபலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

ஆட்டநாயகன் விருது வென்ற பின் டிராவிஸ் ஹெட் பேசுகையில், “நன்றாக சாப்பிட்டு நன்றாக குளித்துவிட்டு சிறப்பாக ஆடி இருந்தேன். மும்பை போட்டிக்கு பிறகு மீண்டும் ஒரு சிறப்பான போட்டி ஆடி உள்ளோம். நாங்கள் முதல் ஆறு ஓவர்களே போட்டியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியமானதாக உள்ளதாக நான் நினைத்தேன். ஆனால், பிட்ச் பரமளிப்பாளர்களிடம் சூழல் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு அனைத்து பேட்ஸ்மேன்களும் லைசன்சுடன் பெங்களூர் பந்து வீச்சாளர்களை நொறுக்கி விட்டனர்.

அபிஷேக் சர்மா மிகச்சிறந்த ஒரு இளம் வீரர். நானும் அவரும் சூழ்நிலைக்கு ஏற்ப வகையில் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறோம். அவருடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். எனக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் அனைத்து முயற்சியையும் பந்து வீச்சாளர்கள் செய்கிறார்கள். மேலும் இன்று நான் பந்தை அடித்து ஆடியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என ஹெட் கூறியுள்ளார்.

சற்று முன்