- Advertisement -
Homeவிளையாட்டுஎங்க சண்டை அப்பவே முடிஞ்சுது.. கடைசியா சிராஜ் சொன்ன வார்த்தை.. மனம் நெகிழ்ந்த ஹெட்

எங்க சண்டை அப்பவே முடிஞ்சுது.. கடைசியா சிராஜ் சொன்ன வார்த்தை.. மனம் நெகிழ்ந்த ஹெட்

- Advertisement-

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடையச் செய்த ஆஸ்திரேலியா அணி தங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் தங்களது இடத்தை பலமாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி காலடி எடுத்து வைத்த சமயத்தில் அவர்கள் இருந்த ஃபார்மிற்கு தொடர்ச்சியாக தோல்வியை தான் சந்திப்பார்கள் என அனைவருமே எதிர்பார்த்தனர்.

ஆனால் பும்ரா தலைமையில் முதல் டெஸ்டில் வென்றிருந்த இந்திய அணி, பகல் இரவு ஆட்டமாக அடிலைட் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயத்திற்கு நிகராக சிராஜ் மற்றும் ஹெட் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த கருத்து மோதல் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தியா இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ஹெட் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். இவர் முதல் இன்னிங்ஸில் 141 பந்துகளில் 17 போர்கள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 140 ரன்களையும் சேர்த்திருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியை விட அதிக ரன்கள் முன்னிலை வகிக்க இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணியால் 19 ரன்களை மட்டும் தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், ஹெட் முதல் இன்னிங்சில் அவுட்டான சமயத்தில் ஒரு மோதல் ஆரம்மானது. ஹெட்டை சிராஜ் போல்டு முறையில் அவுட் செய்திருந்தார். அப்போது வெளியேறி ஹெட், சிராஜை பார்த்து ஏதோ சொல்ல, பதிலுக்கு சிராஜும் ஆக்ரோஷமாக கைகாட்டி ஏதோ கூறியிருந்தார்.

- Advertisement-

இது பற்றி பின்னர் பேசிய ஹெட், நான் நன்றாக பந்து வீசினேன் என்று தான் கூறினேன் என்றும் விளக்கம் கொடுத்தார். ஆனால், ஹெட் தன்னை வாழ்த்தவில்லை என்றும் அவர் பொய் கூறுகிறார் என்றும் சிராஜ் விளக்கம் கொடுக்க, இந்த சம்பவம் சர்ச்சையானது. தொடர்ந்து 2 து இன்னிங்சில் தங்களுக்குள் உருவான மோதல் பற்றி மைதானத்திலேயே சிராஜ் மற்றும் ஹெட் ஆகியோர் பேசிக் கொண்டனர். பின்னர் போட்டி முடிந்ததும் கைகுலுக்கி புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னர் பேசிய ஹெட், சிராஜ் கடைசியாக என்ன சொன்னார் என்பது பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “சிராஜ் என்னிடம் வந்து, ‘ஏதோ தவறான புரிதலில் நடந்து விட்டது. நாம் இதை கடந்து செல்ல வேண்டும். இந்த நல்ல வாரத்தை மோதலின் பெயரில் அழிக்க வேண்டாம்என்று கூறினார்என ஹெட் தெரிவித்துள்ளார்.

சற்று முன்