- Advertisement -
Homeவிளையாட்டுட்ரண்ட் போல்ட் அடித்த இமாலய சிக்ஸ்… கேமராமேனுக்கு என்னப்பா ஆச்சு?

ட்ரண்ட் போல்ட் அடித்த இமாலய சிக்ஸ்… கேமராமேனுக்கு என்னப்பா ஆச்சு?

- Advertisement-

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. அதை சமாளிக்க முடியாமல் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தமாக 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பெரும்பாலான ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் இன்னிங்ஸ் முழுவதும் ஸ்கோர் செய்ய போராடினர்.

இதனால் அந்த அணி இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்களை மட்டுமே அடித்தது. மேலும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸில் சிக்ஸர் அடித்த மூன்று பேட்டர்களில் டிரென்ட் போல்ட்டும் ஒருவர். வேகப்பந்து வீச்சாளரான போல்ட் குஜராத் பவுலர் அகமதுவின் பந்தை அடித்து நொறுக்கிய அந்த சிக்ஸர் இந்த இன்னிங்ஸின் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றானது.

இன்னிங்ஸின் 16வது ஓவரை நூர் அகமது வீசினார் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி அவர் ஏற்கனவே இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.  இந்த ஓவரை எதிர்கொண்ட போல்ட் பேட்டிங் ஸ்பெஷலிஸ்ட் இல்லை என்பதால் நூருக்கு எதிராக தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், போல்ட் மூன்றாவது பந்தில் வியக்க வைக்கும் ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஒன்றை விளையாடினார். வானை நோக்கி சென்ற பந்து எல்லைக் கோட்டை கடந்து சிக்ஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஷாட் எதிரணி வீரர்களையும் ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது. எதிரணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய வியப்பை மறைக்க முடியாமல் முகத்தில் வெளிக்காட்டினார்.

ஆனால் அடுத்த பந்து வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. ஏனென்று பார்கையில் போல்ட் அடித்த சிக்ஸர், அந்த திசையில் ஒளிப்பதிவு பணியில் இருந்த கேமராமேனை தாக்கி, அவரை நிலைகுலையச் செய்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி செய்யப்பட்டது.  இந்த சம்பவத்தால் மைதானத்தில் சில நிமிடங்கள் அசாதரணமான சூழல் நிலவியது. போல்ட்டின் அந்த சிக்ஸர் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement-

பின்னர் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து எளிதாகக் கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.

சற்று முன்