இந்தியாவில் இருவரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 13 வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது 10 அணிகளும் பங்கேற்று விளையாடு வரும் பயிற்சி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அனைத்து அணிகளுமே 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பங்கேற்றம் வரும் பயிற்சி போட்டிகளானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் நேற்று முன்தினம் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 50 ஓவர்பகளின் முடிவில் 321 ரன்களை குவித்தது.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 322 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 37 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததின் காரணமாக நியூசிலாந்து அணி டக் வொர்த் லூயிஸ் முறைப்படி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் போட்டியின் இடைவெளியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஸ்டைலில் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டியின் போது சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வது போன்று போல்ட் சில ஆக்சன்களை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியும் விளையாட இருக்கிறது.