- Advertisement -
Homeவிளையாட்டுஇது என்னடா நடராஜன் அணிக்கு வந்த சோதனை. மிக மோசமான தொடர் தோல்வி. TNPLல் இருந்தே...

இது என்னடா நடராஜன் அணிக்கு வந்த சோதனை. மிக மோசமான தொடர் தோல்வி. TNPLல் இருந்தே வெளியேறும் நிலை

- Advertisement-

TNPL தொடர் கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவுக்காக சில போட்டிகளில் விளையாடிய ஐபிஎல் நட்சத்திரமான நடராஜன் இந்த தொடரில் திருச்சி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் திருச்சி அணி விளையாடியது. இந்த போட்டியை வென்றால் ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்ற ஆசையோடு மதுரை அணி களமிறங்க, திருச்சி அணியோ எப்படியாவது முதல் வெற்றியை ருசித்துவிட வேண்டுமென்ற ஆசையில் களமிறங்கியது.

டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மதுரை அணி பவுலர்களின் பந்துவீச்சு தாக்குதலுக்கு நிலை தடுமாறிய திருச்சி அணி அடுத்தடுத்து விக்கட்களை இழந்து போராடியது. இறுதியில் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. திருச்சி அணியில் மணிபாரதி அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார். மதுரை அணி சார்பாக சரவணன் 3 விக்கெட்களையும், அஜய் கிருஷ்ணா மற்றும் குர்ஜப்னீத் சிங் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் களமிறங்கிய மதுரை அணி நிதானமாகவே ஆட்டத்தை எதிர்கொண்டது. தொடக்க வீரர்களான சுரேஷ் 32 மற்றும் ஸ்வப்னிஸ் சிங் 25 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். நிதானமாக சென்ற ஆட்டத்தில் 17 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து மதுரை அணி 108 ரன்கள் சேர்த்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

- Advertisement-

ஆரம்பத்தில் சொதப்பி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த மதுரை அணி விஸ்வரூபம் எடுத்து அடுத்த 3 போட்டிகளை வென்றுள்ளது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் அந்த அணியின் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இப்போது புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது இந்த அணி.

ஆனால் திருச்சி அணியில் நிலை தான் பரிதாபத்திலும் பரிதாபமாக உள்ளது . அந்த அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோற்று, முதல் அணியாக TNPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

சற்று முன்