- Advertisement 3-
Homeவிளையாட்டுகப்பை இந்தியா பேர்ல எழுதுங்க.. டி20 வேர்ல்டு கப் ஃபைனலுக்காக ஐபிஎல் தொடரிலேயே ஸ்கெட்ச் போட்ட...

கப்பை இந்தியா பேர்ல எழுதுங்க.. டி20 வேர்ல்டு கப் ஃபைனலுக்காக ஐபிஎல் தொடரிலேயே ஸ்கெட்ச் போட்ட குல்தீப் யாதவ்..

- Advertisement 1-

தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோதுவதை பார்ப்பதற்காக தான் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் அதே வேளையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருப்பதால் நிச்சயம் இது திருவிழா போல களைக்கட்டும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு பக்கம் இரண்டு அணிகளை பொறுத்தவரையிலும் வீரர்களும் சரிக்கு சமமாக இருப்பதும் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியில் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கும் நிலையில் பந்து வீச்சிலும் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா, அக்சர் படேல் என அனைவரும் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இதே நிலைமை தான் தென் ஆப்பிரிக்கா அணியிலும் உள்ளது. டிகாக், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், ஸ்டப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் ஷம்சி, மகாராஜா, ரபாடா, நோர்ஜே, யான்சென் உள்ளிட்டோரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால் நீண்ட ஆண்டுகளாக இந்திய அணிக்கு எட்டாமல் இருக்கும் ஐசிசி கோப்பையை அத்தனை எளிதில் சொந்தமாக்குவதற்கு தென் ஆப்பிரிக்கா அணி நிச்சயம் விட்டுக் கொடுக்காது என்றே தெரிகிறது. இதனிடையே, தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குறித்து தெரிவித்த கருத்து தற்போது அதிக கவனத்தை பெற்று வருகிறது.

- Advertisement 2-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்தியா உள்ளிட்ட அனைத்து அணிகளில் உள்ள வீரர்களும் ஒன்றாக ஆடுவதற்கு ஒரு சிறந்த தளமாக இருந்து வருகிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ஸ்டெப்ஸ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒன்றாக ஐபிஎல் தொடரில் இணைந்து ஆடுவதால், இருதரப்பு தொடர் அல்லது ஐசிசி தொடர்களில் அந்த வீரர்களை எதிர்கொள்வதற்கான நுணுக்கங்களும் தெரிய வரும்.

அப்போது பயிற்சிகள் நடைபெறும் சம்பவம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த ஸ்டெப்ஸ், குல்தீப் யாதவ் தனக்கு பயிற்சியின் போது பந்து வீசமாட்டார் என்றும் உலகக்கோப்பை வருவதால் அவரது நுணுக்கங்களை தெரிந்து வைத்து விடுவேன் என்பதற்காக தான் அவர் அப்படி செய்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அதே வேளையில் ஸ்டெப்ஸ் மட்டுமில்லாமல் எந்த ஒரு வெளிநாட்டு வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் பந்து வீசமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஸ்டப்ஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டது போலவே தற்போது தென்னாபிரிக்க அணியை இந்தியா இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள உள்ள நிலையில் குல்தீப் யாதவை எப்படி அவர்கள் சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சற்று முன்