- Advertisement 3-
Homeவிளையாட்டுநம்ம தேஷ்பாண்டேவா இது.. 78 வருட முதல்தர கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக வரலாறு படைத்த சம்பவம்..

நம்ம தேஷ்பாண்டேவா இது.. 78 வருட முதல்தர கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக வரலாறு படைத்த சம்பவம்..

- Advertisement 1-

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பைத் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் புஜாரா, ரஹானே உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் ஆடிவரும் நிலையில் சௌராஷ்டிரா அணி காலிறுதியுடன் வெளியேறி இருந்தது. இந்த அணியை புஜாரா வழிநடத்தி வந்த நிலையில், ரஹானே வழிநடத்தி வரும் மும்பை அணி, அரையறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முன்னதாக காலிறுதிப் போட்டியில் பரோடா அணியை எதிர் கொண்டு ஆடி இருந்தது மும்பை அணி. இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் நிறைய ரன்கள் அடித்து முன்னிலை வகித்ததால் மும்பை அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் மார்ச் இரண்டாம் தேதி ஆரம்பமாகவுள்ள முதல் அரை இறுதியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளும் மோதுகின்றன.

நான்கு அணிகளுமே அதிக பலத்துடன் இருக்கும் நிலையில், யார் இந்த முறை ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே 78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு சம்பவம் மும்பை மற்றும் பரோடா அணிகள் மோதிய காலிறுதி போட்டியில் போட்டியில் நடந்து பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களும், பரோடா அணி 348 ரன்களும் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் முதலில் ஆடிய மும்பை அணி 337 ரன்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து ஆடி வந்தது. கடைசி விக்கெட்டிற்கு முறையே பத்தாவது மற்றும் 11 வது வீரர்களான தனுஷ் கொட்டியான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் களத்தில் இருந்தனர்.

- Advertisement 2-

இதனால் மேற்கொண்டு குறைவான ரன்கள் தான் மும்பை அணி சேர்க்கும் என கருதப்பட்ட நிலையில், அவர்கள் ஆடிய ஆட்டம் தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது. இதில் தனுஷ் 129 பந்துகளில் 10 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்திருந்தார். இன்னொரு பக்கம் துஷார் தேஷ் பாண்டே, 129 பந்துகளில் 10 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசி இரண்டு வீரர்களும், 78 ஆண்டுகால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடிப்பது இதுதான் முதல் முறை. அதிலும் தற்போது பலரின் பார்வையும் திரும்பி உள்ளது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் துஷார் தேஷ்பாண்டே மீது தான். கடந்த சீசனில் இவரது பந்துவீச்சில் அதிகம் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் மறுபக்கம் நிறைய ரன்களையும் வாரி வழங்கியிருந்தார்.

அப்படி ஒரு சூழலில் தான் இந்த முறை சதமடித்து முதல் தர கிரிக்கெட்டில் ஒரு வரலாறு படைத்துள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சற்று முன்