- Advertisement -

பும்ரா கூட இல்லாத லிஸ்ட்.. ரெண்டே ஓவரில் முக்கியமான பட்டியலில் இடம்பிடித்த துஷார் தேஷ்பாண்டே..

நடப்புத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை ருத்துராஜ், ஷிவம் துபே, மிட்செல், தோனி உள்ளிட்ட வீரர்களால் நிரம்பி இருந்தாலும் பந்துவீச்சு அப்படியே நேர்மாறாக இருந்து வந்தது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள பந்து வீச்சாளர்கள் அனைவருமே கடந்த சில போட்டிகளில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாததால் தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் நிலையும் உருவாகி இருந்தது.

பேட்டிங்கில் நல்ல ஃபார்மல் சிஎஸ்கே அணி இருந்து வந்தாலும் பந்து வீச்சில் அதனை தொடர முடியாததால் தோல்வியடைந்து இருந்தனர். ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டும் பந்து வீசி அசத்தியிருந்தனர்.

- Advertisement -

சிஎஸ்கே அணி 250 ரன்கள் அடித்தால் கூட தோல்வியடையும் நிலை தான் பந்துவீச்சின் மூலம் இருந்தது. இதற்கு உதாரணமாக லக்னோ அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கூட 210 ரன்கள் அடித்திருந்த போதும் அதனை மிக எளிதாக லக்னோ அணி அடிக்கும் அளவிற்கு தான் சென்னை அணியின் பந்துவீச்சு அமைந்திருந்தது.

அப்படி இருக்கையில் சென்னை அணியின் அடுத்த போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் அதிரடிக்கு பெயர் போன ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற இருந்ததால் சென்னை அணி எப்படி இந்த போட்டியில் சமாளிக்கப் போகிறது என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

- Advertisement -

வழக்கம் போல ருத்துராஜூம் இந்த போட்டியில் டாஸ் தோல்வியடைய அனைவரும் பயந்தது போலவே ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. இதன்படி ஆடிய சென்னை அணி 212 ரன்கள் எடுத்திருந்தாலும் ஒருவேளை தோற்று விடுவார்களா என்ற அச்சமும் ஹைதராபாத் அணி பேட்டிங் வருவது வரை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையிலான பந்து வீச்சை அதன் பின்னர் வெளிப்படுத்தி இருந்தார் துஷார் தேஷ்பாண்டே. தான் வீசிய முதல் ஓவரிலேயே ஹெட் மற்றும் அன்மோள் ப்ரீத்சிங் விக்கெட்டை வீழ்த்தி இருந்த துஷார் தேஷ்பாண்டே அடுத்த ஓவரில் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றியை மிக எளிதாக மாற்றி இருந்தார்.

இறுதியில் பேட் கம்மின்ஸ் விக்கெட் வீழ்த்தியதுடன் 27 ரன்கள் மட்டுமே மூன்று ஓவர்களில் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தான் பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இந்த சீசனில் எடுத்து மிகச் சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளார் துஷார் தேஷ்பாண்டே.

இந்த சீசனில் மொத்தம் மூன்று வீரர்கள் தான் பவர்ப்ளே ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதில் ராஜஸ்தான் வீரர் ட்ரென்ட் போல்ட் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும், சந்தீப் வாரியர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது, துஷார் தேஷ்பாண்டேவும் பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Recent Posts