- Advertisement -
Homeவிளையாட்டுசூர்யகுமாரை புகழ்ந்து தள்ளும் சக வீரர்கள் - டிவிட்டர் முழுக்க அவர் பேச்சு தான். யார்...

சூர்யகுமாரை புகழ்ந்து தள்ளும் சக வீரர்கள் – டிவிட்டர் முழுக்க அவர் பேச்சு தான். யார் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க.

- Advertisement-

சர்வதேச டி 20 போட்டிகளில் மூன்று சதங்களை விளாசியுள்ள சூர்யகுமார் யாதவ், நேற்று ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான போட்டி. ஏனென்றால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மூன்றாம் இடத்துக்கு முன்னேறலாம். மற்றும் ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பும் பிரகாசமாகும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்களை சேர்த்தது. இந்த இமாலய ஸ்கோருக்கு மூன்றாவது பேட்ஸ்மேனாக இறங்கிய சூர்யகுமார் யாதவ்வின் அற்புதமான சதம் முக்கியக் காரணமாக அமைந்தது. அவர் சந்தித்த 48 பந்துகளில் 103 ரன்களை சேர்த்தார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் வானவேடிக்கைக் காட்டினார்.

- Advertisement -

அவரின் இந்த இன்னிங்ஸை கிரிக்கெட் ரசிகர்கள், சக மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அதில் சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு…

இர்பான் பதான் – முன்னாள் இந்திய அணி பவுலர்
பவுலர்களின் கொடுங்கனவு
மலிங்கா – முன்னாள் இலங்கை பந்துவீச்சாளர்
சூர்யகுமார் – தன் வகையில் சிறந்தவர்
யூசுப் பதான் – முன்னாள் இந்திய  வீரர்
தலைகுணிந்து வணங்குகிறேன் –அவரின் முதல் ஐபிஎல் சதம்.  பேட்டிங்கில் ஒரு மாஸ்டர் கிளாஸ்.
பத்ரிநாத்- முன்னாள் சி.எஸ்.கே. வீரர்
சூர்யா மறுபடியும் ஃபார்ம் என்பது தற்காலிகமானது. கிளாஸ் நிரந்தமானது என நிரூபித்துள்ளார். தற்போது இருக்கும் டி 20 பேட்ஸ்மேன்களில் சிறந்தவர்.
யுவ்ராஜ் சிங் – முன்னாள் இந்திய வீரர்
சூர்யகுமாரின் பேட்டிங் வேற் கிரகத்தில் உள்ளது. நம்ப முடியாத அளவுக்கு ஹிட்டிங்.
ஆரோன் பின்ச் – முன்னாள் ஆஸி வீரர்
நான் பார்த்ததில் மிகச்சிறந்த டி 20 இன்னிங்ஸ்.  சூர்யகுமார் பேட்டிங் வேற லெவலில் உள்ளது.

- Advertisement-

சற்று முன்