- Advertisement -
Homeவிளையாட்டுஎது, ODIல 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியா? U 19 உலக கோப்பை தகுதி ...

எது, ODIல 396 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியா? U 19 உலக கோப்பை தகுதி சுற்றுல நடந்த சிறப்பான சம்பவம்

- Advertisement-

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டம் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஜப்பான் அணியை 162 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது போட்டியில் வனுவாட்டு அணியை 396 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 431 ரன்களை குவித்து அசத்தியது. இப்படி 431 ரன்கள் என்கிற மிகப்பெரிய ஸ்கோரை நியூசிலாந்து அணி அடித்து இருந்தாலும் அந்த அணியில் எந்த ஒரு வீரரும் சதம் அடிக்கவில்லை.

அந்த அளவிற்கு அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை பேட்டிங்கில் வழங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து 432 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி வனுவாட்டு அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது.

50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் 23 ஓவர்களை மட்டுமே விளையாடிய வனுவாட்டு அணி வெறும் 35 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 396 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றது.

- Advertisement-

இப்படி ஒரு போட்டியில் 396 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவதை கிரிக்கெட் உலகமே தற்போது வியந்து பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்டோர் அணியில் சிறப்பாக விளையாடும் சில வீரர்கள் சீனியர் கிரிக்கெட்டிலும் இடம்பெற்று சாதனைகளை நிகழ்த்தி வருவதை நாம் கண் கூடாக பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்