வரலாறு படைத்த UAE… 15.4 ஓவரிலேயே நியூசிலாந்தை மடித்து பொட்டலம் கட்டி அபார வெற்றி.. சாதித்து காட்டிய இளம் வீரர்கள்

- Advertisement -

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அனைத்து அணிகளும் வலிமையான அணிகள் தான். டி20, டி10 என்று உலகம் முழுக்க லீக் போட்டிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிரிக்கெட்டின் வளர்ச்சி, பல்வேறு நாடுகளிலும் வேகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக ஜாம்பவான் அணிகள் கூட டி20 போட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய ஏற்பட்டுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டம் மாறும் நிலையில் வீரர்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்றிரவு நியூசிலாந்து அணி ஒரு அதிர்ச்சியை சந்தித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி துபாய் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் செல்லவில்லை என்றாலும், டிம் சவுதி, சாண்ட்னர், சாப்மேன், செய்ஃபெர்ட் உள்ளிட்ட வீரர்கள் அணியில் உள்ளனர். இந்த நிலையில் 2வது டி20 போட்டி நேற்றிரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அணியின் கேப்டன் முகமது வாசிம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரக அணியின் வேகப்பந்துவீச்சாளர் அயான் கான் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக செய்ஃபெர்ட், சாண்ட்னர், போவ்ஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். இதனால் 5 ஓவர்களுக்குள்ளாகவே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

- Advertisement -

இதையடுத்து வந்த சாப்மேன் மட்டும் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய சாப்மேன் 46 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் விளாசியது. இதனால் 143 என்ற எளிய இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் களமிறங்கியதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடக்க வீரர் ஆர்யன்ஷ் சர்மா டக் அவுட்டான நிலையில், கேப்டன் முகமது வாசிம் மொத்த கட்டுப்பாட்டையும் கையில் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவருக்கு பவுண்டரியை விளாசிய தள்ளிய அவர், 29 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை பொளந்து கட்டினார். பின்னர் வந்த அரவிந்த் நிதானம் காட்ட, ஆசிஃப் கான் பவுண்டரிகளாக அடித்து மிரட்டினார்.

இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்து அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்