- Advertisement 3-
Homeவிளையாட்டுஅதுனால மட்டும் தான் தோத்து போனோம்.. ரோஹித்தை போல உண்மையை உளறிய U 19 கேப்டன்..

அதுனால மட்டும் தான் தோத்து போனோம்.. ரோஹித்தை போல உண்மையை உளறிய U 19 கேப்டன்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த U 19 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி இருந்தது. அதே ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தது.

சர்வதேச இந்திய அணி, தோல்வியை சந்தித்ததால் U 19 அணியில் இடம்பெற்றுள்ள இந்திய இளம் வீரர்கள் அதற்கான தக்க பதிலடியை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுப்பார்கள் என்று கருதி இருந்த நிலையில், அதுவும் நிறைவேறாமல் போயுள்ளது. தொடர்ந்து நடந்த மூன்று உலக கோப்பையின் இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது இந்திய ரசிகர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

கடந்த ஒரு நாள் உலக கோப்பையை தோல்வி அடைந்தது இன்னும் மறக்க முடியாமல் இருக்க இந்த தோல்வி இன்னும் ஒரு வடுவாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கடந்த முறை அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற்றிருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.

இந்த U 19 உலக கோப்பையிலும் கூட உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. ஃபைனல் மட்டும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் உதய் சஹாரன் தெரிவித்த கருத்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement 2-

U 19 இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் இந்த தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். லீக் சுற்று, சூப்பர் 6 மற்றும் அரை இறுதி போட்டிகளில் இந்திய அணிக்காக பெரும் பங்காற்றி இருந்த உதய் சஹாரன், இறுதி போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அப்போதே பறிபோனது.

இதற்கிடையே தோல்விக்கு பின் பேசிய உதய் சஹாரன், “அணி வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது. அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்த நிலையில், அவர்கள் அப்படி ஆடியதும் எனக்கு பெருமிதமாக உள்ளது. நாங்கள் நல்ல முறையில் தான் தயாராகி இருந்தோம். ஆனால் அந்த திட்டத்தை எங்களால் சரியாக செயல்படுத்த முடியாததால் தோல்வியடைந்தோம்.

சில வீரர்கள் மோசமான ஷாட்களை ஆடி அவுட்டாகினர். நாங்கள் இன்னும் கொஞ்ச நேரம் பேட்டிங்கில் நிலைத்து நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம். இந்த தொடர் மூலம் நிறைய விஷயங்களை நாங்கள் தெரிந்து கொண்டோம். இதன் மூலம் இனி வரும் போட்டிகளில் அவற்றை கற்றுத் தேர்ந்து கொண்டு சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என உதய் சாஹரன் குறிப்பிட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவை போல அணியில் உள்ள தவறை அப்படியே அவர் ஒத்துக்கொண்டார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்