- Advertisement 3-
Homeவிளையாட்டு43 வயசு.. முதல் டி 20 உலக கோப்பை போட்டி.. 27 வருஷ கனவை சாதனையாக...

43 வயசு.. முதல் டி 20 உலக கோப்பை போட்டி.. 27 வருஷ கனவை சாதனையாக மாற்றிய உகாண்டா வீரர்..

- Advertisement 1-

நடப்பு டி 20 உலக தொடரில் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வரும் விஷயம் என்றால் அங்குள்ள பிட்ச்கள் தான். இதுவரை பல போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், சில அணிகள் 150 ரன்களை கடப்பது என்பதே கடினமான விஷயமாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் உள்ள நிறைய மைதானங்கள் சமீபத்தில் தயார் செய்யப்பட்டிருந்ததால் அதன் பிட்ச்களை கணிக்க இன்னும் நேரமாகும்.

ஆனால், அதற்குள் பல லீக் போட்டிகள் முடிவடைந்து விடும் என்பதால் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது கூட கணிக்க முடியாத விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த உலக கோப்பை போட்டிகளில் பல சாதனைகள் உடைக்கப்பட்டு வந்தாலும் போட்டிகள் சிலவை சுவாரஸ்யமாக இல்லாமல் போனது பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் இந்த நிலை மாறும் என்றும் சிறந்த பிட்ச்கள் தயார் செய்யப்பட்டு அதற்கேற்ப போட்டியும் விறுவிறுப்பாக செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 போட்டியில் உகாண்டா வீரர் செய்த முக்கியமான சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம்.

சி பிரிவில் இடம்பெற்றிருந்த பப்புவா நியூ கினியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் லீக் போட்டியில் மோதி இருந்தது. இதில் உகாண்டா அணியில் 43 வயதாகும் சுபுகா என்ற வீரர் இடம்பிடித்திருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி, முதலில் பேட்டிங் செய்து 19.1 ஓவர்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

- Advertisement 2-

இதனை எளிதாக உகாண்டா அணி எட்டிவிடும் என பார்த்தால், அவர்களே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழக்க மொத்தம் இரண்டே வீரர்கள் தான் 10 ரன்களுக்கு மேல் அடித்திருந்தனர். ரியாசட் அலி ஷா என்ற வீரர் 33 ரன்களை எடுக்க, எப்படியோ தட்டுத் தடுமாறி 7 விக்கெட்டுகளை இழந்து 19 வது ஓவரில் தான் வெற்றி பெற்றிருந்தது.

அப்படி இருக்கையில் தான் இந்த போட்டியில் உகாண்டா பந்து வீச்சாளர் சுபுகா என்ற வீரர் செய்த சாதனையை பற்றி தற்போது பார்க்கலாம். இவர் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓவர்கள் மெய்டனுடன் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதன் மூலம், டி 20 உலக கோப்பை வரலாற்றிலேயே முழுமையாக 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்களை கொடுத்துள்ள பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபுகா. கடந்த 27 வருடங்களாக கிரிக்கெட் போட்டிகள் ஆடி வரும் சுபுகா, முத்தான சாதனையை முதல் டி 20 உலக கோப்பை போட்டியிலேயே படைத்துள்ளார். மேலும் உகாண்டா நாட்டுக்கும் இது முதல் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்