- Advertisement -
Homeவிளையாட்டுகிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை.. ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சுனில் நரைன்.. பொங்கி எழுந்த...

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை.. ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சுனில் நரைன்.. பொங்கி எழுந்த பொல்லார்டு .. சிபிஎல்-ல் அரங்கேறிய சம்பவம்

- Advertisement-

கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கே இருக்கிறது. ஐபிஎல்லில் மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் அதிரடி காட்டுவார்கள், இப்போது கரீபியன் பிரீமியர் லீக் அவர்களது சொந்த மண்ணில் நடப்பதால் எவ்வளவு அதிரடி காட்டுவார்கள் என நம் எல்லோராலும் யூகிக்க முடியும். அந்த வகையில் போட்டிகள் ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பனிரெண்டாவது ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் பற்றியொட்ஸ் அணியும் ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் ஆடியசெயின்ட் கிட்ஸ் அண்ட் பற்றியொட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக ஷெர்பாண் ருத்தெரர்போர்ட 38 பந்துகளில் 62 ரன்களை குவித்தார்.

பின்பு களம்பிறங்கிய ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அதன் பிறகு களம் இறங்கிய நிக்கோலஸ் பூரான் 32 பந்துகளில் 61 ரன்களும், கேப்டனான கிரான் பொல்லார்ட் 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சிறப்பாக பேட்டிங் செய்த நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தக் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடரில் பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிட்ட நிமிடங்களில் ஓவர்களை வீசி முடிக்காவிட்டால் அந்த அணி வீரர்கள் எவருக்காவது ரெட் கார்டு வழங்கப்படும். அப்படி ரெட் கார்ட் வழங்கப்படும் அணியில் இருந்து ஒருவீரர் உடனடியாக களத்தை விட்டு வெளியேற வேண்டும். ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணியினர் குறிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.

- Advertisement-

இதனால் ஆட்ட நடுவர்கள் ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு ரெட் கார்ட் கொடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த கேப்டன் கிரான் பொல்லார்ட் வேறு வழியில்லாமல் தனது அணியில் இருந்து சுனில் நரேனை களத்தை விட்டு வெளியேற வைத்தார். இதனால் ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கடைசி ஓவரில் 10 வீரர்களை மட்டும் வைத்து விளையாடியது.

இதுகுறித்து ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொல்லாத கூறியதாவது, கள நடுவர்கள் எங்களது அணிக்கு பெனால்டி விதித்தது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் இது அனைவரது கடின உழைப்பிற்கு எந்த ஒரு பயனும் இல்லாதது போல உள்ளது என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் ட்ரிண்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக பந்து வீசிய சுனில் நரேன் நான்கு ஓவர்களின் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

சற்று முன்