கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரை அம்பையரின் பணி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணியாக இருக்கிறது. ஒரு போட்டியின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு தன்மை நம் நடுவரிடம் உண்டு என்றால் அது மிகையாகாது. ஆனால் அம்பயர்களின் முடிவுகளால் அவர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம்தான்.
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை டெஸ்ட் பைனல் போட்டியில் கூட சுமன் வில்லன் அவுட் பெரும் சர்ச்சைக்கு உள்ளானதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் ஐசிசி பேனலில் உள்ள அம்பயர் நித்தின் மேனன் தனது பணி அனுபவங்கள் குறித்தும் இந்திய வீரர்கள் கொடுக்கும் அழுத்தம் குறித்தும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் அவர் கூறியது பின்வருமாறு,
முதல் இரண்டு வருடங்கள் இந்திய துணைக்கண்டங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் அதன் பிறகு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் துபாயில் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்றது எனக்கு நல்லதொரு அனுபவமாக இருந்தது. நான் இதுவரை சிறப்பான பல அதிகாரிகளோடும் வீரர்களோடும் பணியாற்றியுள்ளேன். இதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். என்னுடைய குணாதிசயங்கள், அழுத்தத்தின் கீழ் என்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது போன்று பல விடயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
பொதுவாக இந்திய மண்ணில் இந்திய வீரர்கள் விளையாடும் போது அந்தப் போட்டியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதே சமயம் அந்த போட்டியில் மிகப்பெரிய வீரர்களும் பங்கேற்று இருப்பார்கள். அது நமக்கு மிகப்பெரிய ஒரு அழுத்தத்தை கொடுக்கும். போட்டியில் மிகப்பெரிய வீரர்கள் அவுட் ஆகும்போது அந்த முடிவு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக அமையலாம் இந்த நிலையில் இருக்கும்போது, அந்த வீரர்கள் அந்த முடிவு தங்களுக்கு தான் சாதகமாக அமைய வேண்டும் என்று ஒருவித அழுத்தத்தை நமக்கு கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அந்த அழுத்தத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் சரியான நிலையில் இருந்து எங்களது முடிவை கூற வேண்டும்.
இது போன்ற சூழல்தான் அழுத்தத்தில் இருக்கும் நாங்கள் எப்படி சரியான முடிவை எடுக்கிறோம், அழுத்தத்தை எப்படி கையாளுகிறோம் போன்றவற்றை எங்களுக்கு கற்றுத் தருகிறது. அதே சமயம் எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் இது கொடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்த அவர்,
இதையும் படிக்கலாமே: வீடியோ: கிரிக்கெட் வரலாறில் இப்படி ஒரு கேட்சை பாத்திருக்க முடியாது. சூப்பர் மேன் போல பறந்து பிடிக்கப்பட்ட அசாத்திய கேட்ச் – பாராட்டிய டிகே
ஐசிசி எலைட் பேனலில் நுழைவதற்கு முன்பு எனக்கு பெரிய அனுபவம் எல்லாம் கிடையாது. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக என்னுடைய பணியில் நான் சிறந்து விளங்க பலவற்றை நான் கற்றுக் கொண்டேன். ஒரு பிளேயருக்கு பிட்னஸ் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அம்பேருக்கும் பிட்னஸ் என்பது மிக முக்கியம் என்று கூறியுள்ளார் நித்தின் மேனன்